சுப்மன் கில் சாய் சுதர்சன் அதிரடி சதங்கள்.. சிஎஸ்கேவுக்கு எதிரா 2 மாஸ் சாதனைகள்.. அகமதாபாத்தில் அதகளம்

0
185
Gill

இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதித்து இருக்கிறார்கள்.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி முதலில் பந்து வீசுவது என அறிவித்தது. இதைத்தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் சுப்மன் கில் இருவரும் களம் வந்தார்கள். இந்த ஜோடி ஆரம்பம் முதலில் அதிரடியாக விளையாடியது. மேலும் எந்த இடத்திலும் விக்கெட்டை தருவதற்கான அறிகுறியைக் காட்டவில்லை.

- Advertisement -

இந்த ஜோடி பவர் பிளேவில் 50 ரன் பார்ட்னர்ஷிப்பை கடந்தது. மேலும் 10 ஓவரை தாண்டுவதற்குள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. இந்த ஜோடியில் முதலில் கில் தனது அரை சதத்தை அடித்தார். இதைத்தொடர்ந்து சாய் சுதர்சனும் தனது அரை சதத்தை அடித்தார். தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் தொட்டது.

மேலும் கில் 50 பந்தில் தன்னுடைய சதத்தை அடித்து அசத்தினார். இதற்கு அடுத்த சில பந்துகளில் சாய் சுதர்சன் 50 பந்துகளில் தன்னுடைய முதல் ஐபிஎல் சதத்தை அடித்து அவரும் அசத்தினார். இதைத்தொடர்ந்து இந்த ஜோடி 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பிரிந்தது. சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன் 53 பந்துகளில் 5 பவுண்டரி 7 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து சுப்மன் கில் 55 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 105 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதையும் படிங்க : சச்சின் ருதுராஜ் சாதனை காலி.. தமிழக வீரர் சாய் சுதர்சன் மெகா ஐபிஎல் ரெக்கார்ட்

- Advertisement -

இறுதியில் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது. துஷார் தேஷ்பாண்டே இரண்டு விக்கெட் கைப்பற்றினார். இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் கேப்டனாக கில் மாறினார். மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்னாக இந்த ஜோடியின் 210 ரன்கள் பதிவானது.