சச்சின் ருதுராஜ் சாதனை காலி.. தமிழக வீரர் சாய் சுதர்சன் மெகா ஐபிஎல் ரெக்கார்ட்

0
610
Sai

இன்று ஐபிஎல் தொடரின் 59ஆவது போட்டியில் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அசத்தலான ஐபிஎல் சாதனை படைத்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் அதிசயமாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் டாஸ் வென்றார். மேலும் சிஎஸ்கே முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. இரண்டு அணியிலும் சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு இருந்தது. மேலும் இந்த போட்டியில் தோற்றால் அதிகாரபூர்வமாக குஜராத் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் குஜராத் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக இந்த முறை சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் கில் இருவரும் வந்தார்கள். இந்த ஜோடி சான்ட்னர் வீசிய முதல் ஓவரை 14 ரன்கள் உடன் வெற்றிகரமாக ஆரம்பித்தது. அங்கிருந்து இருவரும் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்கள்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் முதலில் கில் அதிரடியாக விளையாடி தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்தார். இதற்கு அடுத்து அவருடன் சேர்ந்து விளையாடிக் கொண்டு வந்த சாய் சுதர்சன் தன்னுடைய ஏழாவது ஐபிஎல் சதத்தை அடித்தார். இந்த ஜோடியின் அதிரடி 10 ஓவர்கள் தாண்டியதும் அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் குறைந்த போட்டிகளில் ஆயிரம் ரன்கள் அடித்த இந்திய வீரர் என்கின்ற அசத்தல் சாதனையை படைத்தார். மொத்தம் 25 இன்னிங்ஸ்களில் 7 அரை சதங்கள் உடன் 137 ஸ்ட்ரைக் ரேட்டில், சாய் சுதர்ஷன் ஆயிரம் ரன்கள் கடந்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : கோலியை வச்சு 17 வருஷம் கழிச்சு சாதிங்க.. சாம்சன் சொன்னது தான் சரி – சவுரவ் கங்குலி பேட்டி

ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ருதுராஜ் இருவரும் 31 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்ததே இந்திய பேட்ஸ்மேன்களில் ஐபிஎல் தொடரில் சாதனையாக இருந்தது. சாய் சுதர்ஷன் 25 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்து இவர்களது சாதனையை முறியடித்து இருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் ஷான் மார்ஸ் 21 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை கடந்தது சாதனையாக இருக்கிறது.