கோலிக்கு எதிராக இது இல்லை.. டி20 உலககோப்பை இந்திய ஓபனர் இவர்தான் – இயான் மோர்கன் பேச்சு

0
20
Virat

ஐபிஎல் தொடர் முடிந்து டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க இருக்கின்ற காரணத்தினால், டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் பெரிய அணிகளின் கிரிக்கெட் நிர்வாகங்கள் அதற்கான தயாரிப்பு பணிகளில் வேகமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த வகையில் இந்த முறை டி20 இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரராக யார் இருக்க முடியும் என இங்கிலாந்தின் இயான் மோர்கன் கூறி இருக்கிறார்.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக டி20 உலகக் கோப்பையில் இருப்பார்கள் என்று கருதப்பட்டது. தற்போது ஜெய்ஷ்வால் ஐபிஎல் தொடரில் மிகவும் சுமாராக விளையாடும் வருவதால், இதில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதே சமயத்தில் 15 பேர் கொண்ட டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் மூன்றாவது துவக்க ஆட்டக்காரருக்கான இடம் இருக்காது எனவும் கணிக்கப்படுகிறது. ஏனென்றால் விராட் கோலி துவக்க வீரராக விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி அவர் விளையாடினால் சிவம் துபே போன்ற ஒருவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவும் முடியும்.

எனவே இந்த முறை மாற்று பேட்ஸ்மேன்களுக்கான இடம் என்பது இரண்டு விக்கெட் கீப்பர்களை வைத்து நிரப்பப்படும் என்று தெரிகிறது. அதாவது பிளேயிங் லெவனில் இடம் பெறாமல் வெளியில் இருக்கும் இரண்டாவது விக்கெட் கீப்பர், பேட்டிங் யூனிட்டில் எந்த பேட்ஸ்மேன் ஆவது காயம் அடைந்து விளையாட முடியாமல் போனால், அவருடைய இடத்தில் விளையாடலாம். உதாரணமாக சஞ்சு சாம்சன் போன்ற விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இருப்பது முக்கியம்.

இந்த நிலையில் ஜெய்ஸ்வால் இல்லை கில் இருவரில் யாருக்கு வாய்ப்பு என பேசி இருக்கும் இயான் மோர்கன் கூறும்பொழுது “சுப்மன் கில் மிகவும் மதிக்கப்படக்கூடிய திறமையான வீரர். அவர் இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எந்த நாட்டிலும் விளையாடுவதற்கான வீரராக இருக்கிறார். டி20 இந்திய அணிக்கான ஓபனர்கள் தேர்வில், கில் மற்றும் ஜெய்ஸ்வாலுக்கு இடையே போட்டிகள் இருக்கும். ஆனால் விராட் கோலிக்கு எதிராக எதுவும் இருக்காது. ஏனென்றால் அவராலே துவக்க ஆட்டக்காரராகவும் விளையாட முடியும்.

- Advertisement -

இதையும் படிங்க : அன்றே கணித்த ரெய்னா.. இன்று ஏற்றுக்கொண்ட ரோகித்.. டி20 உலகககோப்பை அணியில் யாருக்கு வாய்ப்பு?

மேலும் கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து தன்னால் முடிந்தவற்றை செய்து கொண்டு வருகிறார். கேப்டனாக தன்னுடைய பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறார். மேலும் பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பு இரண்டும் வேறு வேறு என்பதை அவர் தெளிவாகப் புரிந்து இருக்கிறார். அவர் கேப்டனாக இருப்பதால் மேலும் கற்றுக் கொள்ளக் கூடிய அதிக வாய்ப்பில் இருக்கிறார். எனவே இதன் காரணத்தால் அவர் ஜெயஸ்வாலை விட போட்டியில் முன்னணியில் இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்