அன்றே கணித்த ரெய்னா.. இன்று ஏற்றுக்கொண்ட ரோகித்.. டி20 உலகககோப்பை அணியில் யாருக்கு வாய்ப்பு?

0
304
Raina

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் முடிவடைந்ததும், ஜூன் மாதத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இருக்கிறது. இந்த முறை வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்கா என இரு நாடுகளில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில், மொத்தம் 20 அணிகள் பங்கு பெற இருக்கின்றன. இதில் இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா யாரை மிக அதிகமாக விரும்புவார்? என சுரேஷ் ரெய்னா ஏற்கனவே கூறியிருந்தார்.

நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியை ஐசிசி இடம் சமர்ப்பிப்பதற்கான கடைசி செய்தியாக மே ஒன்றாம் தேதி முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. எனவே அனைத்து அணிகளும் அதற்குள்ளாக தங்களின் இறுதி அணியை சமர்ப்பிக்கும். மேலும் சமர்ப்பித்த அணியில் ஏதாவது மாற்றங்கள் தேவை என்றால் மே 26 ஆம் தேதி வரையில் செய்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் தற்பொழுது இந்திய டி20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது கொண்டுவரப்பட்டார்கள். இதன் காரணமாக ஏற்கனவே இந்திய டி20 அணியில் ஒரு வருடமாக இடம்பெற்று விளையாடி வந்த இரண்டு வீரர்கள் வெளியேற வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது.

அதே சமயத்தில் விக்கெட் கீப்பராக இருந்து வந்த இஷான் கிஷான் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். மேலும் ஜிதேஷ் சர்மா ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. துரு ஜூரலுக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரு சில வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் விக்கெட் கீப்பர்கள் யார்? என்பதும் பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இது சம்பந்தமாக ஐபிஎல் தொடருக்கு முன்பாக பேசியிருந்த சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது, ரிஷப் பண்ட் உடல் தகுதியை எட்டி, ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டார் என்றால், நிச்சயமாக ரோகித் சர்மா விக்கெட் கீப்பராக முதலில் ரிஷப் பண்ட்டை தான் தேர்வு செய்வார் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : சிவம் துபே பாவம்.. ஜெய்ஸ்வாலுக்கு டி20 உலககோப்பை இந்திய அணியில் இடமில்லையா? – ரோஹித் சர்மா பேச்சு

தற்பொழுது சுரேஷ் ரெய்னாவின் கருத்து சரி என்பது போல் பேசி இருக்கும் ரோஹித் சர்மா கூறும் பொழுது “அணியில் எல்லா வீரர்களும் கலகலப்பானவர்கள். ஆனால் என்னை ஒரு வீரர் சிரிக்க வைக்க முடியும் என்றால் அது ரிஷப் பண்ட் மட்டும்தான்.அவர் மிகவும் வேடிக்கையானவர். அவர் விபத்தில் சிக்கி சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாமல் இருந்ததற்கு நான் மிகவும் வருத்தப்பட்டேன். எனவே அவர் இந்திய டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவேன்” என்று கூறியிருக்கிறார்.