“நாளை தமிழ்நாடு அணிக்கு எதிரா ஸ்ரேயாஸ் வரார்.. எல்லாத்தையும் அவரே பாத்துக்குவார்” – ரகானே பேட்டி

0
710
Rahane

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார்.

இதற்கு அடுத்து அவரது சொந்த மாநில அணியான மும்பை அணி ரஞ்சி கிரிக்கெட் கால் இறுதி போட்டியில் பரோடா அணிக்கு எதிராக மிகவும் இக்கட்டான நிலையில் சிக்கியது. இந்த போட்டியில் சர்பராஸ்கான் தம்பி முசீர் கான் இரட்டை சதம் அடித்து மும்பை அணியை காப்பாற்றினார்.

- Advertisement -

இந்த போட்டியில் பங்கேற்பதற்கு தன்னால் முடியாது, தனக்கு சிறிது காயம் இன்னும் இருக்கிறது என்று கூறி ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக விளையாடாமல் தவிர்த்தார்.

இந்தப் போட்டி முடிவுக்கு பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியின் விளையாட்டு அறிவியல் குழுவின் தலைவர் நிதின் படேல் ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் எதுவும் இல்லை, அவர் இந்திய அணியின் தேர்வுக்காக தயாராக இருந்தார் என்று கூறினார்.

ஸ்ரேயாஸ் அய்யர் பொய் சொல்லி உள்நாட்டு கிரிக்கெட் விளையாடாமல் தவிர்த்தது பிசிசிஐக்கு கடும் கோபத்தை உண்டாக்க, அவரை அதிரடியாக சம்பள பட்டியலில் இருந்து நீக்கியது.

- Advertisement -

இந்த நிலையில் ரஞ்சி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று நாளை துவங்குகிறது. இதில் ஒரு போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தப் போட்டிக்கு மும்பை அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் திரும்புகிறார்.

மும்பை அணியின் கேப்டன் ரகானே ஸ்ரேயாஸ் ஐயர் திரும்பி வருவது குறித்து கூறும் பொழுது “அவர் ஒரு அனுபவ வீரர். அவர் மும்பை அணிக்காக விளையாடிய பொழுதெல்லாம் அவருடைய பங்களிப்பு மிகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. அவரை எங்கள் அணியில் வைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

இதையும் படிங்க :தோனி எங்க கடவுளுங்க.. அவர் இல்லாம எங்களுக்கு எதுவும் இல்ல” – சவுரவ் திவாரி பேட்டி

அவருக்கு நாம் தனிப்பட்ட முறையில் எந்த ஊக்கமும் ஆலோசனையும் கூறத் தேவையில்லை. அவர் எப்பொழுதும் பேட் மூலம் நிறைய பங்களிப்பு செய்திருக்கிறார். மேலும் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருப்பது அனைத்து மிகவும் உத்வேகமான ஒன்றாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.