மும்பை இந்தியன்ஸ் டீமை சிலர் உடைச்சிட்டாங்க.. சுயநலமான வீரர்களை வெளியே அனுப்புங்க – அம்பதி ராயுடு கருத்து

0
1248
Ambati

நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் நான்கு வெற்றிகள் மற்றும் பெற்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பற்றி அம்பதி ராயுடு மிகவும் வெளிப்படையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

அம்பதி ராயுடு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2010 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை விளையாடினார். அந்த காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்று முறை ஐபிஎல் சாம்பியன் ஆக வந்திருந்தது. பிறகு 2018 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தக்க வைக்காமல் வெளியில் விட்டது. பிறகு அங்கிருந்து அவர் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார்.

- Advertisement -

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தங்களின் வெற்றிகரமான பழைய கேப்டன் ரோஹித் சர்மாவை பொறுப்பில் நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை கொண்டு வந்தது முற்றிலுமாக அந்த அணியின் சமநிலையை சீர்குலைத்து இருக்கிறது. இது களத்தில் ஒவ்வொரு போட்டியின் போதும் எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி இருக்கும் அம்பதி ராயுடு கூறும் பொழுது “மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் எப்பொழுதும் அணிக்கே முன்னுரிமை தரக்கூடியதாக இருந்திருக்கிறது. வீரர்கள் அணியின் ஒரு பகுதியாகத்தான் இருந்து வந்திருக்கிறார்கள். சச்சின் பாஜி கூட அப்படித்தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இருக்கிறார். இப்போது அந்த அணியில் பல அதிகார மையங்கள் இருப்பதாக நான் உணர்கிறேன். அவர்களுக்கு இப்போது ஒரு நோக்கமும் அல்லது திசையோ இல்லை. இப்படி எந்த அணி இருந்தாலும் அந்த அணி தடுமாறும்.

உங்களுடைய முன்னுரிமை உங்களுடைய அணிக்கு என்றால், உங்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் பின்னே சென்று விடுகின்றன. இந்த ஐபிஎல் தொடக்கத்திற்கு முன்பாக மும்பை இந்தியன்ஸ் அணியை பற்றி பேசாமல் அனைவருமே மற்ற அனைத்து விஷயங்களையும் பற்றிதான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : ருதுராஜ் இந்த விஷயத்தில் அதிர்ஷ்டசாலிதான்.. ஆனா அவருக்கு நல்ல கிரிக்கெட் மூளை இருக்கு -மைக் ஹசி கருத்து

இது அவர்கள் முன்னேறி செல்ல வேண்டிய ஒரு பகுதி. அவர்கள் எல்லாவற்றையும் ஒரே திசையில் செலுத்த வேண்டும். யாராவது இந்தக் கப்பலில் வர விரும்பவில்லை என்றால், அவர்கள் யாராக இருந்தாலும் விடுவித்து, எப்போதும் அணிக்காக விளையாடும் வீரர்களை பெற வேண்டும். தங்கள் சுயநல நோக்கங்களுக்கு விளையாடாமல், அணிக்காக விளையாட விரும்பும் வீரர்களைக் கொண்டு அணி உருவாக்கப்பட வேண்டும்” என்று அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.