“தோனி எங்க கடவுளுங்க.. அவர் இல்லாம எங்களுக்கு எதுவும் இல்ல” – சவுரவ் திவாரி பேட்டி

0
79
Dhoni

பீகார் மாநிலத்திலிருந்து பிரிந்த ஒரு மாநிலமாக ஜார்க்கண்ட் மாநிலம் இருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் ஆரம்ப காலகட்டங்களில் 90கள் தாண்டி, இப்படியான இடங்களில் இருந்து கிரிக்கெட்டுக்குள் வந்த வீரர்கள் பெரிதாக யாரும் கிடையாது.

மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை என்று பெரு நகரங்களில் இருந்து தான் நிறைய கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு விளையாட வந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

கிரிக்கெட் இந்தியா முழுக்க நுழைந்து விட்டாலும் கூட, சர்வதேச கிரிக்கெட் வீரராக உயர்வதற்கான அடிப்படை கட்டுமானங்கள் இந்தியா முழுமைக்கும் கிடையாது. ஒவ்வொரு மாநிலத்திலும் அம் மாநிலத்தின் பெரு நகரத்தில் மட்டுமே அப்படியான வாய்ப்புகள் இருந்தன.

இதில் பீகார், ஜார்க்கண்ட் மாதிரியான மாநிலங்களில் பொதுவாக கிரிக்கெட்டுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அப்பொழுது மிகவும் குறைவாக இருந்தது. இப்படியான ஒரு இடத்தில் இருந்து உருவாகி வந்தவர் தான் மகேந்திர சிங் தோனி.

மகேந்திர சிங் தோனியின் வருகைக்குப் பிறகு இந்தியாவின் பல சிறிய ஊர்களில் இருந்து வீரர்கள் இந்திய அணிக்கு புறப்பட்டு வர ஆரம்பித்தார்கள். மேலும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தோனி ஒரு தனித்த அடையாளமாக தெரிந்தார். அவரின் வளர்ச்சி அந்த மாநில கிரிக்கெட் வளர்ச்சியையும் ஊக்குவித்தது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஜார்கண்ட் மாநில சௌரவ் திவாரி கூறும் பொழுது “தோனி அவர்கள் ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட்டின் கடவுள். அவர் இந்தியாவுக்காக விளையாட தொடங்கிய பிறகு தான் எங்களை ஒரு அணியாகவே மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். ஜார்க்கண்ட் எங்கிருக்கிறது என்பது குறித்து அவர்கள் தெரிந்து கொண்டார்கள். தோனி எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்தார்.

அவருடன் இருக்கும் பொழுதோ, அவர் எங்கள் ஊரில் இருக்கும் பொழுது, பயிற்சி செய்வதற்காக அவர் எப்பொழுதும் எங்களுடன் வருவார். சில வார்ம்-அப் விளையாட்டுகளிலும் பங்கேற்பார். அவருடைய ஆதரவுதான் எங்களுக்கு எல்லாமே.

தோனி பையா அணியை வழிநடத்தி கேப்டனாக இருக்கும் பொழுது நமக்கு மிகவும் சுதந்திரம் தருவார். நாம் சரியாக செயல்படாவிட்டாலும் கூட நமக்கு தொடர்ந்து நம்பிக்கையையும் ஆதரவையும் கொடுப்பார்.

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா உள்நாட்டு போட்டியில் விளையாடுவாரா? சம்பள ஒப்பந்தம் எப்படி கிடைத்தது?.. தெளிவு படுத்திய பிசிசிஐ தரப்பு

இதேபோல் அவர் விக்கெட் கீப்பராக மிகவும் திறமையானவர். அவர் அந்த இடத்தில் இருக்கும் பொழுது பந்துவீச்சாளர்களுக்கு நல்ல ஆலோசனைகளை தருவார். ஆடுகளத்தில் என்ன இருக்கிறது இல்லை என்றுஅவர் துல்லியமாக சொல்லுவார்” என்று கூறியிருக்கிறார்.