நான் சூரியகுமார் விஷயத்தில் பெரிய தவறு செய்து விட்டேன்.. எனக்கு வேறு வழியில்லை – கம்பீர் வருத்தம்

0
723
Gambhir

தற்போது இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வழிகாட்டியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அணியின் கேப்டனாக இருந்த காலகட்டத்தில் சூரியகுமார் விஷயத்தில் தவறு செய்துவிட்டதாக தற்பொழுது வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்.

கம்பீர் 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். மேலும் அவர் 2018 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்லும் பொழுது அணியை வழிநடத்தி இருக்கிறார். மேலும் இவரது காலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் உத்தப்பா, கிரீஸ் லின் போன்ற வீரர்களுடன் சூரியகுமார் யாதவும் சேர்ந்து விளையாடினார்.

- Advertisement -

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “ஒரு கேப்டனின் முக்கிய பங்கு தமது வீரர்களின் திறமையை வெளி உலகத்திற்கு காட்டுவதாகும். கொல்கத்தா அணிக்காக என்னுடைய ஏழு வருட கேப்டன் பொறுப்பில் நான் வருத்தப்படக்கூடிய ஒரு விஷயம் இருந்தால், அது நானும் அணியும் சேர்ந்து சூரிய குமாரின் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததுதான் என்று கூறலாம். காரணம் அணியின் காம்பினேஷன் அப்படி இருந்தது.

நீங்கள் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் ஒரு வீரரை மட்டுமே விளையாட முடியும். மேலும் நீங்கள் ஒரு கேப்டனாக மீதமுள்ள 10 வீரர்கள் குறித்தும் யோசிக்க வேண்டும். சூரியகுமார் யாதவ் பேட்டிங் வரிசையில் மூன்றாம் இடத்தில் மிகவும் திறமையானவராக இருந்திருக்க முடியும். ஆனால் அவருக்கு என்னால் ஏழாம் இடம் மட்டுமே கொடுக்க முடிந்தது.

- Advertisement -

அதே சமயத்தில் நீங்கள் சூரியகுமார் யாதவை ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் விளையாடினாலும், இல்லை நீங்கள் அவருக்கு விளையாடும் அணியில் இடம் கொடுக்கவில்லை என்றாலும் கூட, அவர் அணிக்காக எப்பொழுதும் சிரித்துக் கொண்டே செயல்படுவதற்கு தயாராக இருந்தார். அதனால்தான் அவரை துணை கேப்டனாக நியமித்தோம்.

இதையும் படிங்க : 400 கோடி சும்மா சம்பாதிக்கிறாங்க.. ஐபிஎல் முதலாளிகள் வீரர்களை பற்றி கவலைப்படுவதில்லை – சேவாக் விமர்சனம்

சூரியகுமார் யாதவ் ஒரு வடிவ கிரிக்கெட்டுக்கான வீரர் என்பதில் திருப்தி அடைய கூடாது. அவருக்கு எல்லா வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்து விளங்கும் திறமை இருக்கிறது. மேலும் நீங்கள் உங்களை ஒரு வடிவ கிரிக்கெட் வீரராக மாற்றினால் நீங்கள் குறைவாகவே சாதிக்க முடியும். ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அவர் ஆபத்தானவராக இருக்க முடியும். எனவே அவர் தன்னை ஒரு வடிவ கிரிக்கெட்டில் மட்டுமே சுருக்கிக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -