ரோகித் சர்மா 50 வயசு வரைக்கும் விளையாடனும்.. முதல்ல இத நீக்கனும் – யுவராஜ் சிங் தந்தை அதிரடியான பேச்சு

0
8
Rohit

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு கடந்த வாரத்தில் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட இந்த இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா இருக்கிறார். தற்போது அவரது ஓய்வு குறித்து பேசி இருக்கும் யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் அதிரடியாக ஒரு கருத்தை கூறியிருக்கிறார்.

தற்போது ரோகித் சர்மாவுக்கு 37 வயது ஆகிறது. மேற்கொண்டு அவர் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் மட்டுமே, ஒரு உலகக் கோப்பை வடிவத்தில் அவரால் விளையாட முடியும். மற்றபடி 2026 ஆம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை, அதற்கு அடுத்து மேலும் இரண்டு வருடங்கள் கழித்து நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் நிச்சயம் விளையாட முடியாது.

- Advertisement -

மேலும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. அவர் சிஎஸ்கே அணிக்கு எதிராக அடித்த ஒரு சதம் மட்டுமே சிறப்பான ஆட்டமாக இருக்கிறது.

எனவே தற்போது அவரை டி20 உலகக்கோப்பை இந்திய கேப்டனாக கொண்டு வந்தது குறித்தும் நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் இவரைப் போலவே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என சொதப்பிக்கொண்டு இருக்கும் ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக கொண்டு வந்ததும் விமர்சனங்களை இன்னும் அதிகரித்திருக்கிறது.

இப்படியான நிலையில் இது குறித்து பேசி இருக்கும் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் கூறும் பொழுது “ஒரு கிரிக்கெட் வீரரின் வயது குறித்த பேச்சு எதனால் எழுகிறது என்பது குறித்து என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் 40 மற்றும் 42 வயதில் விளையாடினால் என்ன தவறாகி விடப் போகிறது. எங்கள் நாட்டில் மட்டும் 40 வயதானால் உடனே அது குழந்தைகளுடன் இருப்பதற்கான நேரம் என்று மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அப்போதும் எதுவும் முடிவது கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் டீமை சிலர் உடைச்சிட்டாங்க.. சுயநலமான வீரர்களை வெளியே அனுப்புங்க – அம்பதி ராயுடு கருத்து

இந்தியாவுக்காக உலக கோப்பையை வென்ற போது மொஹிந்தர் அமர்நாத்துக்கு வயது 33. இறுதிப் போட்டியில் அவர் ஆட்டநாயகனாக இருந்தார். எனவே இந்திய கிரிக்கெட்டில் வயது ஒரு காரணியாக இருப்பதை நீக்க வேண்டும். ரோகித் சர்மா மற்றும் சேவாக்கு இருவரும் பயிற்சி மற்றும் பிட்னஸ் பற்றிய கவலை இல்லாத சிறந்த வீரர்கள்” என்று கூறி இருக்கிறார்.