சாம்பியன்ஸ் டிராபி.. பயிற்சியில் நெட் பவுலருக்கு ஏமாற்றம்.. ஸ்ரேயாஸ் ஐயர் தந்த ஆச்சரிய பரிசு

0
185

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மட்டும் துபாயில் தங்களது போட்டிகளில் விளையாடுவது பெரும் விவாதத்தை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு பிரச்சனை மற்றும் அரசியல் காரணங்களால் இந்திய அணி தங்களுடைய போட்டியை ஹைபிரிட் மாடல் முறைப்படி துபாயில் விளையாடுகிறது.

இந்த சூழலில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் அணிகள் துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகிறார்கள். அப்போது பயிற்சி செய்யும் வீரர்களுக்கு பந்து வீசுவதற்காக துபாயில் உள்ள கிரிக்கெட் வீரர்களை ஐசிசி நியமித்துள்ளது.

- Advertisement -

நிறைவேறாத பவுலரின் ஆசை:

அதன்படி துபாயில் கடந்த 18 ஆண்டுகளாக வசித்து வருபவர் தான் ஜஸ்கிரன் சிங். இவர் யுஏஇ கிரிக்கெட் அணிக்காக விளையாட முயற்சி செய்து வருகிறார். சார்ட்டட் அக்கவுண்ட்டட் ஆக இருக்கும் ஜஸ்கிரன் சிங் பார்ட் டைம் ஆக கிரிக்கெட் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் துபாய்க்கு வரும் அணிகளுக்கு ஜஸ்கிரன் பந்து வீசி வந்தார். அப்போது பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளுக்கு ஜஸ்கிரன்சிங் பந்து வீசினாலும் இந்திய வீரர்களுக்கு அவரால் பந்து வீச முடியவில்லை. காரணம் ஏற்கனவே பல சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இருந்ததால் ஜஸ்கிரன் உதவி இந்தியர்களுக்கு தேவைப்படவில்லை.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் தந்த பரிசு:

இதனால் தனது கனவு பலிக்காதா என்று ஜஸ்கிரன் சிங் இருந்தார். இதனை கவனித்த ஸ்ரேயாஸ், ஜஸ்கிரன் சிங்கிடம் எப்போதும் எப்படி இருக்கிறீர்கள் என விசாரித்து இருக்கிறார். அப்போது திடீரென்று ஜஸ்கிரனை பார்த்த அவர், உங்களுடைய ஷூ சைஸ் என்ன என்று அவர் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்திய அணி துபாய்ல இருந்ததால தப்பிச்சிங்க.. பாகிஸ்தான் வந்து இருந்தா அந்த கதையே வேற – ராபின் உத்தப்பா பேச்சு

இதற்கு அவர் 10 என பதில் அளிக்க, நான் உங்களுக்காக ஒரு பரிசு வைத்திருக்கிறேன் என்று கூறி அவருக்கு புதிய சைஸ் வாங்கி உள்ளார். இதனை தாம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என ஜஸ்கிரன் சிங் பாராட்டியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயரின் இந்த செயல் என் வாழ்நாளில் மறக்க முடியாது என்றும், இன்றைய நாளை எனக்கு அவர் ஸ்பெஷல் ஆக மாற்றிவிட்டார் என்றும் கூறியுள்ளார். இதுபோன்று பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக தான் வலைப்பயிற்சியில் பந்து வீசியது நல்ல அனுபவமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -