இந்திய கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபியை கொடுத்ததே தப்பு.. அதை பார்க்கவே நல்லா இல்ல.. இதான் காரணம் – சோயப் அக்தர் விமர்சனம்

நேற்று சாம்பியன்ஸ் டிராபி பரிசளிப்பு விழாவில் நடந்த ஒரு விஷயம் பார்ப்பதற்கு நன்றாக இல்லை என பாகிஸ்தான் முன்னால் வீரர் சோயப் அக்தர் குற்றம் சாட்டியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி சாம்பியன் ஆனது. இறுதியில் பரிசளிப்பு விழாவில் ஐசிசி தலைவர் ஜெய் ஷா கலந்து கொண்டு கோப்பையை இந்திய கேப்டன் இடம் கொடுத்தார்.

ஆரம்பத்தில் இருந்து சிக்கல்

நடந்து முடிந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவது என்று முடிவானதில் இருந்து இந்திய அணி அங்கு செல்ல விரும்பவில்லை. இதன் காரணமாக தொடர்ந்து இதைச் சுற்றி நிறைய விவாதங்கள் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இறுதியாக இந்திய அணி ஹைபிரிட் மாடலில் விளையாட ஒத்துக் கொண்டது.

இதைத்தொடர்ந்து இந்திய அணி தனது போட்டிகள் அனைத்தையும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விளையாடியது. இருந்த போதிலும் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவது சாதகத்தை உருவாக்குகிறது என எதிர்ப்புகள் என ஆரம்பித்தன. இறுதியாக இந்திய கேப்டன் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஆகியோர் விளக்கம் சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பார்க்க நன்றாகவே இல்லை

இந்த நிலையில் நேற்றைய பரிசளிப்பு விழா குறித்து பேசி இருக்கும் சோயப் அக்தர் ” இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருக்கிறது. இதில் பரிசளிப்பு விழாவை பார்க்கும் பொழுது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த நிகழ்வின் போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து ஒருவர் கூட மேடையில் கிடையாது. இது என்ன மாதிரியான நடைமுறை என்று எனக்கு புரியவில்லை”

இதையும் படிங்க : ரோஹித் இப்படி செய்வார்னு அவங்க நினைக்கல.. அப்போ அபாரமான கேப்டன் பொறுப்பை பார்த்தேன் – பாக் வக்கார் யூனிஸ்

“இந்த தொடரை நடத்தியது பாகிஸ்தான் ஆனால் பரிசளிப்பு விழா மேடையில் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகியும் இல்லை. இது எனக்கு பார்க்க அப்பாற்பட்டது போல இருந்தது. யோசித்துப் பாருங்கள் உலக அரங்கில் இப்படி ஒரு இடத்தில் நீங்கள் தொடரை நடத்தும் பொழுது மேடையில் இருந்திருக்க வேண்டும். நிச்சயமாக இது பார்ப்பதற்கு நல்லதாக இல்லை” என்று விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -
Published by