அண்டர் 19 ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்திய அணி பதிவு செய்துள்ள நிலையில், இந்தத் தொடரில் பிளேயர் ஆப் தி டோர்னமென்ட் விருதை வென்ற இளம் வீரர் ஆரிய வீர் சேவாக் இந்த வெற்றி குறித்துப் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பேசியிருக்கிறார்.
இது குறித்து ஆரியன் வீர் சேவாக் பேசும்போது “இந்த விக்கெட் பேட்டிங் செய்வதற்கு மிகவும் நன்றாக இருந்தது என்றும், இது பெரிய ஸ்கோர் கிடையாது என்பதால் நாம் வழக்கமான ஷாட்களை விளையாடினால் போதும், இலக்கை எளிதாக அடைந்துவிடலாம் என்று டிரெஸ்ஸிங் ரூமில் பேசிக்கொண்டோம். மேலும், இந்த இலக்கை நாம் நிச்சயம் சேஸ் செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை எங்களிடம் எப்பொழுதும் இருந்தது” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து, இலக்கு சற்று அதிகமாக இருந்ததால் கேம்-பிளானை மாற்ற யோசித்தீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் “இல்லை, அப்படி எதுவும் யோசிக்கவில்லை. ஏன்னென்றால், கடைசி 10 ஓவர்களில் 100 அல்லது 120 ரன்களை எப்படி சேஸ் செய்வது என்பது பற்றி எங்கள் டீம் மீட்டிங்குகளில் எப்போதும் பேசுவோம். மேலும், இந்த விக்கெட் பேட்டிங் செய்ய மிகவும் உகந்ததாக இருந்ததால், யாராவது ஒருவர் கடைசி வரை கிரீஸில் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது. அந்தப் பணியை லட்சியா சிறப்பாகச் செய்தார், அவருக்கு எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இறுதி ஓவர்களில் அணியின் வெற்றிக்கு வித்திட்ட மற்ற வீரர்களின் பங்களிப்பைப் பாராட்டிய அவர் “கடைசி கட்டத்தில் மோகித் மற்றும் மனல் சௌகான் செய்த செயல் அற்புதமானது, அவர்களுக்கும் எனது பாராட்டுகள்” என்று கூறியுள்ளார். மேலும், தனது தந்தை சேவாக்கிடம் பேசிவிட்டீர்களா என்ற கேள்விக்கு “இல்லை சார், நான் இன்னும் பேசவில்லை, பிறகு பேசுவேன்” என்று கூறியுள்ளார்.