இன்று அண்டர் 19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் வரிசையில் பத்தாதாக வந்து 26 பந்தில் 49 ரன்கள் எடுத்து மோகித் உல்வா இந்தி அணியை சாம்பியன் ஆக்கினார். இந்த வெற்றி குறித்து அவர் பேசியிருக்கிறார்.
கடைசி ஓவரில் ஆட்டத்தை எப்படி அணுகினீர்கள் என்பது குறித்து மொஹித் உல்வா பேசுகையில், “அப்போது என் மனதில் பெரிதாக எந்த ஓவர் திங்கிங்கும் இல்லை; என்னை நான் முழுமையாக நம்பினேன், கடவுள் மீதும் நம்பிக்கை வைத்திருந்தேன். அதுவரை எனது ஆசிய கோப்பை பயணம் சிறப்பாக அமையவில்லை என்றாலும், என்னை ஒரு பவுலர் மட்டுமல்லாமல் ஒரு ஆல்-ரவுண்டராகவும் நினைத்தேன்; ஆனால் என்னை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. என்றாலும் என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் எப்போதும் இருந்தது, குறிப்பாக எனக்கு மணலின் ஆதரவு தேவைப்பட்டது, அவர் களத்திற்கு சென்று கிரீஸ் செட் செய்து கொடுத்த மொமட்டம் அற்புதமாக இருந்தது, நான் களத்திற்கு சென்று வேலையை முடிக்க வேண்டியதிருந்தது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் வெற்றி ரன்களை அடித்தது குறித்து அவர் கூறுகையில், “அந்த ஒரு பந்திற்காக நான் காத்திருந்தேன்; பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது, கடவுள் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தேன், அன்று எனது நாளாக அமைந்து ஆட்டத்தை முடிப்பேன் என்று நம்பினேன். என்னால் முடியும், நான் அதைச் செய்வேன், கடைசி வரை போராடி முடித்துக் காட்டுவேன் என்று என்னை நானே அடிக்கடி சொல்லிக் கொள்வேன். மேலும் வெங்கடா எனக்கு மிகப்பெரிய கான்பிடன்ஸ் கொடுத்தார்; ‘உன்னால் முடியும், நீதான் பினிஷ் செய்வாய்’ என்று அவர் என்னிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். கடைசி பந்தில் எங்களால் வெற்றி பெற முடியும் என்ற மணல் கொடுத்த நம்பிக்கை எனது தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது; கடைசி பந்து வரை கிரீஸில் நின்றால் ஆட்டத்தை முடித்துவிடலாம் என்று உறுதியாக நம்பினேன்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “நம்பர் 10 என்பது எனக்கு எப்போதுமே ஒரு லக்கி நம்பர் தான்; ஏனெனில் எனது பெரும்பாலான ரன்கள் நான் நம்பர் 10-ல் இறங்கியபோதுதான் வந்துள்ளன, அதனால் அது அப்படித்தான் போலிருக்கிறது. அதுபோல இன்னிங்ஸ் இடைவேளையின்போது நடந்த விவாதங்கள் குறித்துப் பேசுகையில், அவர்கள் ரன்களைச் சேர்த்துவிட்டார்கள், நாங்களும் அதை அடிக்க முடியும் என்று நம்பினோம்; எங்களிடம் வலுவான பேட்டிங் வரிசை இருப்பதால் எங்கள் பேட்டிங் மீது எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. பிட்சைப் பார்த்தபோது அது முற்றிலும் ஃபிளாட் ஆக இருந்தது, கையில் விக்கெட்டுகள் இருந்தால் இலக்கை எட்டிவிடலாம் என்று நினைத்தோம். லட்சியா இன்னிங்ஸை அற்புதமாக செட் செய்து அருமையாக விளையாடினார்; துரதிர்ஷ்டவசமாக அவர் அவுட்டாகிவிட்டார், இல்லையென்றால் அவரே ஆட்டத்தை முடித்திருப்பார்” என்றார்.
இறுதியாக அவர் கூறும்போது, “ஆனாலும் அனைவர் மீதும் நம்பிக்கை இருந்தது, கோச் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நான் பேட்டிங் இறங்குவதற்கு முன்பு யெரே கவுட் சார் நேரடியாக என்னிடம் வந்து, ‘உன்னால் முடியும், உன் மீது நம்பிக்கை வை’ என்று கூறினார். அதனால் நான் களத்திற்குச் சென்று பந்தைக் கவனித்து என் ஷாட்டுகளை விளையாடினேன்; என்ன நடக்கிறது அல்லது அடுத்து என்ன நடக்கும் என்று நான் எதைப் பற்றியும் ஓவர் திங் செய்யவில்லை, வெறுமனே பந்தைக் கவனித்து எனது ஷாட்டுகளை மட்டுமே ஆடினேன்” என்று கூறி முடித்துள்ளார்.