இந்திய கிரிக்கெட்

பைனலில் இந்திய அணியை வீழ்த்த.. நியூசி இதை மட்டும் செய்யுங்க போதும் – சோயப் அக்தர் அறிவுரை

நாளை நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்த நியூசிலாந்து அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் சோயப் அக்தர் மற்றும் சோயப் மாலிக் இருவரும் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே இந்த தொடரில் இரு அணிகளும் லீக் போட்டிகள் மோதிய பொழுது இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை மட்டும் செய்யாதிங்க

இந்த நிலையில் நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான சோயப் அக்தர் மற்றும் சோயப் மாலிக் இருவரும் தங்களது ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள்.

முதலில் சோயப் அக்தர் பேசும்பொழுது “இந்தியாவுக்கு எதிராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அதே சமயத்தில் உங்களை நீங்கள் அண்டர்டாக்ஸ் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. உங்களை நீங்கள் பின்தங்கியவர்கள் என்று கருதிக் கொள்ளக் கூடாது. உங்களால் வெற்றி பெற முடியும் என்று நம்ப வேண்டும். நான் இதை சான்ட்னரிடம் பார்த்திருக்கிறேன். அவர் அணி வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடக் கூடியவராக இருக்கிறார்”

- Advertisement -

இரு அணிகளுக்குமான வாய்ப்பு

“நீங்கள் சரியான நேரத்தில் சரியானதை செய்ய வேண்டும். ரோகித் சர்மா உங்களை தாக்க ஆரம்பிப்பார். குறிப்பாக உங்களது சுழல் பந்துவீச்சாளர்களை தாக்குவார். நீங்கள் அப்பொழுது அந்த தாக்குதலை முறியடிக்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி வாய்ப்பு குறித்து என்னிடம் கேட்டால், இந்திய அணிக்கு எழுபது சதவீதமும் நியூசிலாந்து அணிக்கு முப்பது சதவீதமும் இருக்கிறது என்று கூறுவேன். ஆனால் நியூசிலாந்து தங்களுடைய ஏ கேமை விளையாடினால் வீழ்த்த முடியும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : எங்க டீம்ல இவர யாரும் பாராட்டறதில்ல.. ரொம்ப அண்டர்ரேட் பிளேயர்.. ரொம்ப மதிப்பானவர் – கம்பீர் பாராட்டு

சோயப் மாலிக் பேசும் பொழுது “இந்திய பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்வார்கள். இதுதான் இரு அணிக்குமான வித்தியாசமாக இருக்கிறது. இதுவே ரன்களை துரத்த அவர்களுக்கு மிக முக்கியமான காரணியாக அமைகிறது. நீங்கள் இந்திய ஸ்பின்னர்களை ஸ்மித் ஆடியது போல ஆட வேண்டும். அவர் கேப் கண்டுபிடித்து விளையாட முயற்சி செய்தார். உங்களுக்கு 20 முதல் 30 ரன்கள் கிடைத்தால் நீங்கள் அதை 80 முதல் 100 ரன்னாக மாற்ற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by