எங்க டீம்ல இவர யாரும் பாராட்டறதில்ல.. ரொம்ப அண்டர்ரேட் பிளேயர்.. ரொம்ப மதிப்பானவர் – கம்பீர் பாராட்டு

0
252
Gambhir

இந்திய அணியில் ஒரு குறிப்பிட்ட வீரரை யாரும் பெரிதாக பாராட்டுவதில்லை என்றும் அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய மதிப்பு வாய்ந்த வீரர் எனவும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் பாராட்டி பேசி இருக்கிறார்.

தற்போது இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கம்பீர வந்த முதல் ஐசிசி தொடரிலேயே இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றால், பயிற்சியாளராக தனிப்பட்ட முறையில் கம்பீருக்கு அது பெரிய சாதனையாக அமையும்.

- Advertisement -

வீரர்கள் இல்லை அணிதான் முக்கியம்

இந்தியா அணிக்கு வந்த பயிற்சியாளர்களில் கம்பீர் முக்கியத்துவம் மிகவும் அதிகமாக இருந்தது. இந்திய அணியின் முகமாகவும் குரலாகவும் கம்பீரை முன்னிறுத்தும் வேலைகள் நிறைய நடந்தது. அடுத்த எதிர்கால இந்திய அணி எப்படி இருக்க வேண்டும்? என பயிற்சியாளராக வந்த கம்பீர் நிறைய கருத்துக்களை கூறி வந்தார். இதில் முக்கியமாக வீரர்களை விட அணியை முன்னிறுத்த வேண்டும் என்பது அவருடைய பேச்சாக இருந்தது.

மேலும் இந்திய அணியில் நட்சத்திர கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும், வெற்றிக்காக உழைக்கக்கூடிய அனைத்து வீரர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். இந்த நிலையில் அப்படி இந்திய அணியில் யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு வீரர் இருப்பதாகவும் ட்ரெஸ்ஸிங் அறையில் இருப்பதே மிகவும் மதிப்பானது எனவும் கம்பீர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இவர் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்

இதுகுறித்து கம்பீர் கூறும் பொழுது “ஜடேஜா எப்போதும் ரேடாரின் கீழ் சென்று விட்டார் என்று நான் நினைக்கிறேன். நாம் அதிகம் பாராட்டி பேசாத ஒரு வீரராக இருக்கிறார். அது இந்திய அணிக்கு எந்த வடிவமாக இருந்தாலும் அவர் மிகச்சிறந்த பங்களிப்பை எல்லாவற்றிலும் கொடுக்கிறார். குறிப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங் என்று இல்லாமல் ஃபீல்டிங்கிலும் அவருடைய பங்களிப்பு மிகவும் பெரியது”

இதையும் படிங்க : பும்ரா 2025 ஐபிஎல் தொடரில் ஆடுவாரா?.. வெளியான புதிய தகவல்கள்.. மும்பை இந்தியன்ஸ் கலக்கம்

“ஜடேஜா உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவர் என்று நான் கருதுகிறேன். எங்களுடைய டிரெஸ்ஸிங் ரூமில் அவருடைய மதிப்பை நாங்கள் அறிவோம். அவருடைய மதிப்பு எங்கள் டிரஸ்ஸிங் ரூமில் அவர் இருப்பதுதான். டிரெஸ்ஸிங் ரூமுக்கு வெளியே நடக்கின்ற விஷயங்கள் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -