என் டீம் எதிர்பார்க்கிறதும், மத்த டீம் எனக்கு எதிரா ப்ளான் பண்றதும் இதைத்தான்.. விடமாட்டேன் – சிவம் துபே பேட்டி

0
1131
Dube

இன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 63 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான வெற்றியை பெற்று இருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரண்டாவது போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் அந்த அணி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரச்சின் ரவீந்திர 20 பந்தில் 46 ரன்கள், கேப்டன் ருது ராஜ் 36 பந்தில் 46 ரன்கள் என எடுத்து வலிமையான துவக்கத்தை தந்தார்கள். மேலும் இன்றைய போட்டியில் முழுமையான சுழற் பந்துவீச்சாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இருந்தார். அதே சமயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான் மற்றும் சாய் கிஷோர் என இருவர் இருந்தார்கள்.

- Advertisement -

பவர் பிளே முடிந்து சுழற் பந்துவீச்சு ஆரம்பித்த காரணத்தினால், சுழற் பந்துவீச்சை தாக்கி விளையாட சிவம் துபே களத்திற்கு தேவைப்பட்டார். அந்த நேரத்தில் சரியாக ரகானே ஆட்டம் இழக்க, உள்ளே வந்த சிவம் துபே சாய் கிஷோரின் முதல் இரு பந்துகளை சந்தித்து, இரண்டையும் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தை அதிர வைத்தார்.

இதற்கடுத்து அவருக்கு எதிராக வழக்கமாக பயன்படுத்தப்படும் ஷார்ட் பந்து வியூகத்தை வேகப்பந்துவீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் மூலம் கொண்டு வந்தார்கள். அதற்கு கொஞ்சமும் அசராத சிவம் துபே அட்டகாசமாக ஒரு சிக்சரை பறக்க விட்டார். மேலும் கிடைக்கும் வாய்ப்பில் வேகப் பந்துவீச்சிலும் பவுண்டரிகள் அடித்தார். இதனால் அவரை குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சிவம் துபே, அதிரடியாக அரை சதம் அடித்து, 22 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சித்தர்கள் உடன் மொத்தம் 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அவரது அதிரடியின் காரணமாக 206 ரன்கள் சிஎஸ்கே அணி குவித்தது. இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆட்டநாயகன் விருது சிவம் துபேவுக்கு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : பர்சனலா சொல்றேன் ஆட்டத்தை மாத்தினது இவர்தான்.. மஹி பாய் செஞ்ச வொர்க் எபெக்ட் இது – ருதுராஜ் பேட்டி

ஆட்டநாயகன் விருது பெற்ற சிவம் துபே பேசும்பொழுது “சிஎஸ்கே அணி நிர்வாகம் மற்ற எல்லா அணி நிர்வாகங்களை விடவும் முற்றிலும் வித்தியாசமானது. இங்கு எனக்கு முழு சுதந்திரம் கொடுக்கிறார்கள். நான் நன்றாக செயல்பட வேண்டும் என்றும் சில போட்டிகளை வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். எனக்கு எதிராக திட்டமிடப்படும் ஷார்ட் பந்துகளுக்கு நான் வேலை செய்திருக்கிறேன். எனக்கு அப்படி ஆன பந்துகள் வீசப்படும் என்று தெரியும் எனவே நான் தயாராக இருக்கிறேன். நான் இன்று போல நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அதிரடியாக விளையாட வேண்டும் என எனது அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. எனது அணி நிர்வாகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் தொடர்ந்து விளையாடுவேன்” என்று கூறி இருக்கிறார்.