பர்சனலா சொல்றேன் ஆட்டத்தை மாத்தினது இவர்தான்.. மஹி பாய் செஞ்ச வொர்க் எபெக்ட் இது – ருதுராஜ் பேட்டி

0
1928
Ruturaj

இன்று ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணியும், கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெற்ற போட்டி ஒரு பக்கமாக முடிந்திருக்கிறது.

இன்று டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திர 20 பந்தில் 46 ரன்கள் என அதிரடி துவக்கத்தை தந்தார். அதை மேலும் எடுத்துச் சென்ற கேப்டன் ருதுராஜ் 36 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். சிவம் துபேவுக்கு வழி விட ரகானே 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

இதற்குப் பிறகு உள்ளே வந்த சிவம் துபே ஆட்டத்தில் அனல் பறந்தது. ஐந்து சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் 22 பந்தில் 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்து அசத்தியது. இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியில் ரஷித் கான் உட்பட எந்த பந்துவீச்சாளரும் தப்பிக்கவில்லை.

இதற்கு அடுத்து விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாய் சுதர்சன் மட்டுமே தாக்குப்பிடித்து 31 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். வேறு யாரும் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை. 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

கேப்டன் பொறுப்பில் இரண்டாவது வெற்றி பெற்ற ருதுராஜ் பேசும்பொழுது “கண்டிப்பாக இன்றைய ஆட்டம் மிகவும் சரியாக இருந்தது. பீல்டிங், பவுலிங், பேட்டிங் என நாங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக இருந்தோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக நாங்கள் இப்படி விளையாட வேண்டிய அவசியம் இருந்தது. சென்னை ஆடுகளம் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில், நாங்கள் சிறப்பாக செயல்படுவது முக்கியம். மேலும் இங்கு கடைசி பத்து ஓவர்களுக்கு கையில் விக்கெட்டை வைத்திருக்கும் பொழுது நன்றாக இருக்கிறது.தனிப்பட்ட முறையில் சொல்வதாக இருந்தால், ரச்சின் ரவீந்தரா எடுத்ததும் ஆட்டத்தை தன் வழியில் எடுத்துக் கொண்டு போய்விட்டார்.

- Advertisement -

இதையும் படிங்க : 3-3.. புள்ளி பட்டியலில் முதலிடம்.. ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணி.. சிஎஸ்கே குஜராத்தை வீழ்த்தி சாதனை

இதற்கு அடுத்து சிவம் துபே சிறப்பாக விளையாடினார். இளம் வீரர் சமீர் ரிஸ்வியையும் இதில் விட்டுவிட முடியாது. சிவம் துபே முதலில் அணிக்கு வந்த பொழுது, அணி நிர்வாகமும் மஹி பாயும் அவருடன் தனிப்பட்ட முறையில் வேலை செய்தார்கள். இப்பொழுது அவரது நம்பிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது. அவர் மேலும் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். இன்று எங்களுடைய ஃபீல்டிங் பெரிய விஷயமாக இருந்தது. இதில் நான் ஈர்க்கப்பட்டேன். இரண்டு இளைஞர்கள் அணிக்குள் வந்திருக்கின்ற காரணத்தினால் இருக்கலாம். ஆனால் ரகானே பாய் இரண்டு ஆட்டத்திலும் சிறப்பாக இருந்தார். பீல்டிங் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் ஆக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.