அரிதிலும் அரிது.. 140 கிமீ வேகம்.. ஸ்டம்பிங் செய்த கிளாசென்.. புவனேஸ்வர் குமார் யாரும் செய்யாத சாதனை

0
355

நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் போது பஞ்சாப் அணி வீரர் ஷிகர் தவான் ஸ்டம்பிங் செய்யப்பட்ட விதம் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது.

நேற்று பஞ்சாப் மாநிலத்தின் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 37 பந்துகளில் நான்கு பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இந்த வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக பேர்ஸ்டோ மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். அப்போது ஷிகர் தவான் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ஆட்டத்தின் 4.4வது பந்தை இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீச, அதனை தவான் இரண்டு அடி இறங்கி வந்து தடுத்தாட முயற்சித்து பந்தினை மிஸ் செய்ய ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த கிளாசன் அதனை அபாரமாக பிடித்து சிகார் தவானுக்கு மீண்டும் கிரீசுக்குள் வர நேரம் கொடுக்காமல் அற்புதமாக ஸ்டம்பிங் செய்தார்.

ஷிகர் தவான் ஸ்டம்பிங்

சாதாரணமாக ஒரு வேகப்பந்து 130 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசினாலே விக்கெட் கீப்பர் ஸ்டம்புகளில் இருந்து சில மீட்டர் தூரத்தில் தான் இருப்பார்கள். ஆனால் ஸ்டம்புக்கு பக்கத்திலேயே நின்று கொண்டு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்யத தனித்திறமை நிச்சயமாக வேண்டும்.

கிளாசன் சிகர் தவானை ஸ்டம்பிங் செய்தது கிரிக்கெட் வல்லுனர்களால் அதிகம் கவனத்தைப் பெற்று வருகிறது. ஆனால் புவனேஸ்வர் குமார் இதற்கு முன்னரே இது போன்ற ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். 2013ஆம் ஆண்டில் அப்போதைய புனே வாரியர்ஸ் இந்தியா அணிக்காக விளையாடிய புவனேஸ்வர் குமார் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரர் மன்விந்தர் பிஸ்லாவை புனேவை சேர்ந்த விக்கெட் கீப்பர் மகேஷ் ராவத் வீழ்த்தினார். அந்த ஆட்டத்தில் புவனேஸ்வர் குமார் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

இதன் மூலம் ஸ்டம்பிங்கில் ஒரு பேட்ஸ்மேனை இரண்டு முறை ஆட்டமிழக்கச் செய்த வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமார் பெற்றார். இந்த ஸ்டம்பிங் குறித்து புவனேஸ்வர் குமார் கூறும் பொழுது
“தவான் கிரீசை விட்டு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் நான் விக்கெட் கீப்பர் கிளாசனை கீழே வந்து நிற்கச் சொன்னேன். இந்த முயற்சி எங்களுக்கு தகுந்தவாறு பலன் அளித்தது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:ரோகித் சர்மா ஆர்சிபி போக போறாரா.?.. அம்பத்தி ராயுடு தெளிவான பதில்.. மும்பை போட்டிக்கு முன் ருசிகரம்

ஐபிஎல் தொடரில் 173 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புவனேஸ்வர் குமார் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்தார். இதற்கு அடுத்த இடத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் 172 விக்கெட்டுகளுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் இல் கடைசியாக மெக்கலலம் சந்திப் சர்மாவின் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 8 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே ஸ்டம்பிங் மூலம் ஆட்டம் இழக்க செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.