ரோகித் சர்மா ஆர்சிபி போக போறாரா.?.. அம்பத்தி ராயுடு தெளிவான பதில்.. மும்பை போட்டிக்கு முன் ருசிகரம்

0
1524

17வது ஐபிஎல் போட்டியில் நாளை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை அணியில் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா பெங்களூர் அணியில் விளையாடப் போகிறார் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில், அது குறித்து சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.

கடந்த ஏலத்தில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மாற்றம் செய்யப்பட்டு ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து விலக்கி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது வரை அனைவரும் அறிந்ததே. அன்று முதல் ரோகித் சர்மா இது குறித்து தெளிவான விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

- Advertisement -

இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்து ஒரு சாதாரண பேட்ஸ்மேன் ஆக மட்டுமே அணியில் விளையாடிக் கொண்டிருக்கிறார். மும்பை அணிக்காக ஐந்து பட்டங்கள் வென்று கொடுத்த போதிலும், அவர் மும்பை அணியில் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே நீடிப்பது கோப்பையை வெல்லாத மற்ற அணிகளுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தக் கூடும்.

எனவே அவரை தங்களது அணியில் எடுத்து கேப்டனாக நியமித்தால் அணியை வெற்றிகரமாக வழி நடத்துவார் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் ஏற்படும். எனவே இதற்கு அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள மெகா ஏலத்தில் சில அணிகள் அவரைக் கட்டாயம் குறி வைக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த ஆண்டு அவரை மீண்டும் தக்க வைக்குமா? அல்லது ரோஹித் சர்மா மீண்டும் மும்பை அணியில் விளையாட விரும்புவாரா? என்பது பின்னர்தான் தெரிய வரும்.

இந்த நிலையில் ரோகித் சர்மாவை பெங்களூர் அணியில் விளையாட வைக்க ஆர்சிபி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் வெளிவருகிறது. எனவே இது குறித்து சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடுவிடம் கேட்கப்பட்டது. இது குறித்து ராயுடு கூறும் பொழுது “ஆர்சிபி அணிக்கு ரோகித் தேவையா? என்று தெரியவில்லை ஆனால் இப்போது உங்களுக்கு ஒரு தலைப்பு தேவைப்படுகிறது. (சிரித்தவாறே கூறுகிறார்) நாம் என்ன கூறினாலும் இது இறுதியில் ரோஹித் சர்மாவின் முடிவாக மட்டுமே இருக்கப் போகிறது.

- Advertisement -

ரோகித் சர்மா விரும்பினால் அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். அனைத்து அணிகளும் அவரை கேப்டனாக நியமிப்பதை நிச்சயமாக விரும்புவார்கள். மும்பை அணியில் தற்போது நடந்தது போல் இல்லாமல் மற்ற அணிகள் ரோஹித் சர்மாவை சரியாக கையாளும் விதத்தில், அவர் நிச்சயமாக வேறு அணிக்கு செல்வார் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் இந்த ஒரு வீரரை நம்பிதான் இருக்கு.. அவர் வெளியே போனா அந்த டீம் காலி – முகமது கைஃப் பேட்டி

அம்பத்தி ராயுடுவின் கருத்துப்படி, ரோகித் சர்மாவின் விருப்பம் இல்லாமலே அவரிடமிருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டதாக கிட்டத்தட்ட தெரிகிறது. எனவே அவர் அடுத்த சீசனில் வேறு அணிக்காக விளையாடுவாரா? அல்லது மும்பை அணியிலேயே மீண்டும் தொடரப் போகிறாரா? என்பதை காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.