நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை இழந்ததற்காக கேப்டன் ரோகித் சர்மா மீது வைக்கப்படும் விமர்சனங்கள் சரியானவை இல்லை என ஷிகர் தவான் கூறியிருக்கிறார்.
இந்திய அணி 12 வருடங்கள் கழித்து உள்நாட்டில் டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணியிடம் இழந்தது. இதன் காரணமாக நிறைய முன்னால் வீரர்களிடம் இருந்து ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.
மூன்று முக்கிய முன்னாள் வீரர்கள்
இந்திய அணியின் முன்னாள் வீரர்களான ரவி சாஸ்திரி மற்றும் சுனில் கவாஸ்கர், மேலும் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான சைமன் டால் போன்றவர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மீது விமர்சனங்களை முன் வைத்திருந்தார்கள்.
இவர்களை ஒரு படி தாண்டி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடைசி கட்டத்தில் எதிரணி ரன்கள் குவிப்பதை தடுப்பதற்கு ரோஹித் சர்மா தோனியிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என வெளிப்படையாகவே கூறியிருந்தார். இப்படி இந்திய மற்றும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் ரோகித் சர்மா மீது நிறைய விமர்சனங்களை கொண்டிருந்தார்கள்.
இதையெல்லாம் நியாயம் இல்லாதவை
இதுகுறித்து ஷிகர் தவான் கூறும்பொழுது “நீங்கள் அனைவரும் பேசும் அழுத்தம் வீரர்களான நாங்கள் உணரும் ஒன்று கிடையாது. விளையாட்டில் அழுத்தம் இருக்கும் பொழுது நாங்கள் வெற்றி அல்லது தோல்வி பற்றி நினைப்பதில்லை. அது ஆட்டத்தின் ஒரு பகுதி. ரோஹித் சர்மாவின் மீதான விமர்சனம் நியாயமான அல்லது நடைமுறையான அணுகுமுறை இல்லை”
“ஒரு கிரிக்கெட் வீரராக ரோஹித் சர்மா குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் சிறந்த தலைவர். வெற்றி தோல்வியை தாண்டி ஒரு நல்ல பந்தம் இருக்கிறது. அணியில் இருக்கும் தொடர்பு மற்றும் வீரர்கள் அவரை எவ்வளவு விரும்புகிறார்கள்? என்பது சம்பந்தப்பட்டது”
இதையும் படிங்க : விராட் கோலி பேசாம அங்க போயிருங்க.. அப்பதான் முடிவு கண்டுபிடிக்க முடியும் – தினேஷ் கார்த்திக் பேச்சு
“ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாக விளையாடும்.முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடினாலும் இல்லாவிட்டாலும் கூட இந்திய அணி சிறப்பாகவே செயல்படும். இளம் வீரர்கள் அந்த அளவிற்கு தொழில்முறையாகவும் திறமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.






