இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறும் விராட் கோலி உடனடியாக அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.
தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்ஸ்களில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி ஆட்டம் இழந்திருக்கிறார். அவர் ஆட்டம் இழந்த விதம் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது.
விராட் கோலிக்கு பெரிய பிரச்சனை
வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி தொடர்ந்து முன் காலில் விளையாடி ஆட்டோ விளக்குகிறார் அதை தவிர்க்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தொடர்ந்து கூறி வருகிறார். முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் பின் காலில் விளையாடாமல் தவறாக ஆட்டம் இழந்ததாகவும் சுட்டிக்காட்டி இருந்தார்.
இதே போல விராட் கோலி சுழல் பந்துவீச்சுக்கு எதிராக முன் காலில் விளையாட வேண்டிய பந்தை பின்காலில் சென்று விளையாடி அதிக முறை ஆட்டம் இழப்பது தொடர்கதையாகி வருகிறது. எனவே அவர் இந்த பிரச்சனையில் தீர்வு காண வேண்டியது அவசியமாக இருக்கிறது.
விராட் கோலி இதை செய்தாக வேண்டும்
“விராட் கோலிக்கு இது எளிதானது கிடையாது. அவர் இரண்டு டெஸ்ட் போட்டியில் மூன்று இன்னிங்ஸ்களில் ஏமாற்றம் கொடுத்து இருக்கிறார். தொடர்ந்து அவரை சுழல் பந்துவீச்சாளர்கள் தொந்தரவு செய்து வந்திருக்கிறார்கள். இப்போது அவர் உள்நாட்டு கிரிக்கெட் திரும்பி, தற்போதைய டிஆர்எஸ் விதிகளுக்கு உட்பட்டு விளையாடி பிரச்சனைக்கு தீர்வை காண வேண்டும்”
இதையும் படிங்க : ருதுராஜ் ரொம்ப பாவம்.. நான் இன்னொரு அந்த பையனை பேசல.. என்ன திட்டம் வச்சிருக்கிங்க? – ஸ்ரீகாந்த் விமர்சனம்
“விராட் கோலி எப்பொழுதும் பதில்களை தேடும் மனிதர். நீங்கள் ஒரு மேதை மற்றும் சூப்பர் ஸ்டார் என்கின்ற இடத்தை அடையும் பொழுது உங்களை நோக்கி புதிய சவால்கள் வீசப்படும். தற்பொழுது விராட் கோலிக்கு அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாட விரும்புகிறது. இதற்கு விராட் கோலி என்ன செய்யப் போகிறார்?” என்று கூறியிருக்கிறார்.






