2024 ஐபிஎல் சீசன்ல இதுதான் எங்களுக்கு அதிர்ஷ்டமா மாறப்போகுது.. கப் கன்ஃபார்ம் – ஷிகர் தவான் பேட்டி

0
80
Dhawan

ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டு அரை இறுதிக்கும், 2014 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி முன்னேறி இருக்கிறது. இதற்குப் பிறகு அந்த அணி ஒரு முறை கூட பிளே ஆப் சுற்றுக்கு வந்தது கிடையாது. ஒட்டு மொத்தமாக 16 வருடங்களில் 14 வருடங்கள் மோசமான சீசனாக இந்த அணிக்கு அமைந்திருக்கிறது.

ஏலத்தில் வீரர்களை சரியாக வாங்காதது, வாங்கிய சில நல்ல வீரர்களை தொடர்ந்து அணியில் வைக்காதது என்பது மாதிரியான அடிப்படையில் தவறுகள் செய்து, பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் செயல்பாட்டு மதிப்பீட்டில் கடைசி இடத்தை பிடித்துபரிதாபமான அணியாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த முறை ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளின் நட்சத்திர வீரர்கள் ஆரம்பத்தில் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்த போதும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அந்த அணி உடைய மொத்த நட்சத்திர வீரர்களும் முதல் போட்டியிலேயே கிடைக்கக் கூடிய வாய்ப்பில் இருக்கிறார்கள். இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இது நல்ல விஷயமாக இருக்கிறது.

அதே சமயத்தில் இங்கிலாந்து அணி வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரன் மற்றும் கிரீஸ் வோக்ஸ் நான்கு பேரும் மே 22 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக துவங்கும் டி20 தொடருக்கு தயாராக முன்கூட்டியே செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி செல்லும் பொழுது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய பிரச்சனைகள் உருவாகலாம்.

மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் புதிய மைதானமான முல்லன்பூரில் அமைந்துள்ள மைதானத்தில் தனது எல்லா போட்டிகளையும் விளையாடுகிறது. பேட்டிங் செய்ய சாதகமான மொகாலி ஆடுகளத்தில் இருந்து வெளியே வருகிறது. கடந்த ஐபிஎல் சீசனில் வெளி மைதானங்களில் வென்று சொந்த மைதானத்தில் தோற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இந்த மைதானம் நல்லதாக மாறலாம். தற்பொழுது ஜெர்சியும் புதிதாக மாற்றப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 23ஆம் தேதி புதிய மைதானம் முல்லன்பூர் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கு எதிராக பகல் போட்டியில் விளையாட இருக்கிறது. இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பெரிய செயல்பாட்டைக் கொண்ட அணிகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஏழு வருஷமா ஐபிஎல் பட்டத்தை ஜெயிக்க முடியல.. தோக்க போறது நீங்க இல்ல நான்தான் – ரிக்கி பாண்டிங் பேச்சு

இதுகுறித்து பேசி உள்ள பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் கூறும்பொழுது “புதிய ஜெர்சியில் புதிய விவரங்கள் இருக்கின்றன. ஒவ்வொருநாளும் ஒரு புதிய நாள். நீங்கள்புதிய யோசனைகளுடன் வருகிறீர்கள். நாங்கள் பாசிட்டிவான அதிர்வுகளை கொண்டு வர விரும்புகிறோம். புதிய ஸ்டேடியம் அதிர்ஷ்டமானதாக அமையும். நாங்கள் மொகாலி மைதானத்திற்கு நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். மேலும் நன்றி சொல்லிக் கொள்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.