ஏழு வருஷமா ஐபிஎல் பட்டத்தை ஜெயிக்க முடியல.. தோக்க போறது நீங்க இல்ல நான்தான் – ரிக்கி பாண்டிங் பேச்சு

0
269
Ponting

ஐபிஎல் தொடர் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. மேலும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் கட்ட போட்டிகள் இந்தியாவுக்கு வெளியில் செல்லாது என்று ஐபிஎல் சேர்மன் உறுதி கூறி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் பின் தங்கிய அணிகளின் வரிசையில் முதல் இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் இருக்கிறது இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இருக்கிறது. இந்த அணி இறுதியாக ஒருமுறை இறுதிப் போட்டிக்கு வந்து சாம்பியன் பட்டத்தை சென்னை அணியிடம் தவற விட்டு வெளியேறியது.

- Advertisement -

டெல்லி கேப்பிட்டல் அணிக்கு தலைமை பயிற்சியாளராக 7 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் லெஜன்ட் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இருந்து வருகிறார். இவருடன் சேர்த்து இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி இருக்கிறார். மேலும் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்த முறை காயம் குணமடைந்து அணியில் இணைவது பலமாக அமைகிறது.

மேலும் நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் தங்களுக்குத் தேவையான மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் மற்றும் விக்கெட் கீப்பர்களை வாங்கி டெல்லி அணி ஓரளவுக்கு பிரச்சனைகளை சரி செய்து இருக்கிறது. எனவே இந்த முறை கடுமையாக போராட முடியும் என்று அந்த அணி நம்புகிறது. குறிப்பாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நம்புகிறார்.

அணி கூட்டத்தில் வீரர்களிடையே பேசிய ரிக்கி பாண்டிங் ” நான் ஐபிஎல் பட்டத்தை வெல்ல விரும்புகிறேன். ஒருவேளை வெல்ல முடியாவிட்டால், தோற்றது நீங்கள் கிடையாது நான் மட்டும்தான். நான் பயிற்சியாளராக தோல்வி அடைந்தேன் என்று அர்த்தம். டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர்களே உங்களைச் சேர்ந்தவர்களாக மாற்றுவதே பயிற்சியாளர்களாகிய எங்கள் வேலை. அடுத்த பத்து வாரங்களுக்கு நீங்கள் இந்த சூழ்நிலையை அனுபவிக்க நான்உறுதி செய்ய வேண்டும். இது உங்கள் ஒவ்வொருவருக்கும் சிறந்த வாய்ப்பு.

- Advertisement -

இதையும் படிங்க : 2024 ஐபிஎல்.. டீம்களை வலிமைப்படுத்த.. கம்பேக் கொடுக்கும் 5 ஸ்டார் பிளேயர்ஸ்

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடுவது எனக்கு பிடித்த விஷயம். இந்த அணியுடன் நான் ஏழு ஆண்டுகளாக இருந்து வருகிறேன். இன்னும் ஒரு ஐபிஎல் சீசன் வெல்ல முடியவில்லை. இந்த ஆண்டு இதை நாம் மாற்ற வேண்டும். இந்த ஆண்டு நமக்கு வித்தியாசமாக இருக்கும். நீங்கள் நன்றாக இருந்தால் அணி நன்றாக இருக்கும். உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் என்னிடம் கூறுங்கள். நீங்கள் அணியில் உள்ள மற்றவர்களுக்கும் உதவலாம். அதுதான் நம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கலாச்சாரம்” என்று கூறி இருக்கிறார்.