“தமிழ்நாடு அணிக்கு எதிரா சதம் அடிச்சு ஏன் அப்படி கொண்டாடினேன்?.. டாப் ஆர்டர் பெரிய ஓட்டை” – சர்துல் தாக்கூர் பேச்சு

0
140
Shardul

தற்பொழுது இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபி நடைபெற்று வருகிறது. அரை இறுதி சுற்றை எட்டியுள்ள இந்தத் தொடரில், தமிழக அணியும் மும்பை அணியும் ஒரு அரையிறுதி போட்டியில் மும்பையில் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு அடுத்து பேட்டிங் செய்த மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது.

- Advertisement -

மும்பை அணி விளையாடிய விதத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் லீடிங் பெறுவதற்கான வாய்ப்புகள் கூட தெரிந்தது. மேலும் நீண்ட வருடங்கள் கழித்து தமிழக அணி ரஞ்சி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்று கனவுகள் உருவானது.

இந்த நிலையில் ஒன்பதாவதாக பேட்டிங் செய்ய வந்த சர்துல் தாக்கூர் மொத்தமாக கனவை உடைத்து விட்டார். அதிரடியாக விளையாடிய அவர் 89 பந்துகளில் சதம் அடித்தது, 109 ரன்கள் எடுத்து வெளியேறினார். தற்பொழுது மும்பை அணி இந்த போட்டியில் வலுவான நிலையில் இருக்கிறது.

இது குறித்து பேசி உள்ள சர்துல் தாக்கூர் கூறும்பொழுது “சதம் அடித்த பிறகு எனக்கு எப்படி கொண்டாட வேண்டும் என்று அந்த நேரத்தில் தோன்றியதோ அப்படி கொண்டாடினேன் அவ்வளவுதான். இந்தச் சதத்தை அடித்தது பெரிய நிம்மதி. மேலும் அணிக்கு மிகவும் முக்கியமான நேரத்தில் இது வந்திருக்கிறது.

- Advertisement -

பெரிய ஆட்டங்களில் நீங்கள் பயந்து விளையாடினால் விக்கெட்டை இழக்க வேண்டியது வரும். மேலும் உங்களுடைய உண்மையான செயல் திறன் வராமல் போகும். நான் பேட்டிங் செய்ய உள்ளே வந்த பொழுது, நான் என்னுடைய வழியில் சுதந்திரமாக பேட்டிங் செய்வது பற்றிதான் யோசித்தேன்.

தற்பொழுது இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால்வுடன், இன்னும் ஒரு மும்பை பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் இருக்கிறார். தற்போது எங்கள் மும்பை அணியில் காயத்தில் இருந்து திரும்பி வந்த பிரித்திவிஷா, மற்றும் பழைய பேட்டிங் ஃபார்மில் இல்லாத ரகானே ஆகியோர் இருக்கிறார்கள். இதனால் எங்களுடைய டாப் ஆர்டரில் பெரிய ஓட்டை இருக்கிறது.

இதையும் படிங்க : “இந்தியாவுல ரசிகர்கள் எல்லோரும் எனக்கு எதிரா இருக்காங்களா?” – ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேச்சு

இப்படி இருக்கும் பொழுது உங்களுக்கு இப்படியான ஒரு சீசன் கிடைக்கிறது என்றால் பரவாயில்லை. ஆனால் எங்களுக்கு இப்படியான நேரத்தில் கூட கீழ் வரிசையில் இருந்து ரன்கள் வருகிறது. இது மும்பை பேட்ஸ்மேன்கள் கடினமாக போராடும் கடும் மனப்பான்மையைக் கொண்டவர்கள் என்று மற்றவர்கள் கூறுவதை காட்டுகிறது” என்று கூறியிருக்கிறார்.