ஐபிஎல்-ல இந்த டீம்தான் ஜெயிக்கும்.. 15வது ஓவர் வரை பிஷ்னாய் வராத காரணம் இதுதான் – கேஎல் ராகுல் விளக்கம்

0
646
Rahul

நேற்று ஐபிஎல் தொடரில் சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக லக்னோ அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தோல்விக்குப் பிறகு அதற்கான காரணங்கள் குறித்து லக்னோ அணியின் கேப்டன் கே.எல்ராகுல் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் லக்னோ அடி முதலில் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்து விட்டது. இதற்குப் பிறகு கேஎல்.ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்து 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். கே எல் ராகுல் 48 பந்தில் 76 ரன் எடுக்க, அந்த அணி மொத்தமாக 197 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்குப் பிறகு இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் 33 பந்தில் 71 ரன், துருவ் ஜுரல் 34 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 19 ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

தோல்விக்கு பின் பேசிய கேப்டன் கேஎல் ராகுல் ” நாங்கள் இருபது ரன்கள் குறைவாக இருந்து விட்டோம். ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்த பொழுதும், தீபக் ஹூடா உடன் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்தது. செட் பேட்டர்கள் 50, 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல், அதை சதமாக மாற்ற வேண்டியது அவசியமாகிறது. நாங்கள் இந்த இடத்தில் ஒரு 25 ரன்களை இழந்து விட்டோம்.

தற்பொழுது ஐபிஎல் தொடரில் எந்த அணி அதிக சிக்ஸர்கள் அடிக்கிறதோ அந்த அணிதான் வெல்லும் என்கின்ற நிலைமை இருக்கிறது. ராஜஸ்தான் அணி சிக்ஸர்கள் அடிப்பதில் சிறந்த அணி. எங்கள் அணியிலும் பூரன் மற்றும் ஸ்டோனிஸ் இருவரையும் பெரிய சிக்ஸர்கள் அடிப்பதற்கு நம்பி இருக்கிறோம். நாங்களும் எங்கள் வழியில் பெரிய ஷாட் ஆடுவதற்கு முயற்சி செய்கிறோம்.

- Advertisement -

இதையும் படிங்க: எனக்கு வரமும் சாபமும் இதுதான்.. சாம்சன் பாய் நடுவுல இதை சொன்னாரு செஞ்சேன் – துருவ் ஜூரல் விளக்கம்

சாம்சங் மற்றும் ஜூரல் விளையாடும் பொழுது பிஸ்னாயை ஆட்டத்தின் பிற்பகுதியில் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து விளையாடிய காரணத்தினால் அவரை பந்துவீச்சுக்கு கொண்டுவர தாமதமாகிவிட்டது. மேலும் அவரை ஹெட்மயர் மற்றும் ரோமன் பவல் வரும்பொழுது பயன்படுத்தலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதைச் செய்வதற்கான சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது” என்று கூறி இருக்கிறார்.