எனக்கு வரமும் சாபமும் இதுதான்.. சாம்சன் பாய் நடுவுல இதை சொன்னாரு செஞ்சேன் – துருவ் ஜூரல் விளக்கம்

0
598
Jurel

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் தொடருக்கு முன்பான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இளம் விக்கெட் கீப்பராக அறிமுகமான துருவ் ஜுரல் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடர் நன்றாக அமையவில்லை. இந்தச் சூழலில் லக்னோவுக்கு எதிராக நேற்று சிறப்பாக விளையாடியது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

நேற்று லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல்.ராகுல் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். லக்னோ அணி 20 ஓவர்களில் 197 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணி சிறப்பாக பதிவு செய்ய ஆரம்பித்த பொழுதும், லக்னா அணி இறுதியில் சிறப்பாக முடித்து விட்டது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரை சதம் தாண்டி சிறப்பான பார்ட்னர்ஷிப் கொடுத்த போதிலும், இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தது ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடியை உண்டாக்கியது. மேலும் ரியான் பராக்கும் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்து நெருக்கடியை அதிகரிக்க செய்துவிட்டார்.

இந்த நிலையில் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் தற்போது முக்கியமான சூழ்நிலையில் இணைந்த துருவ் ஜுரல் 34 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 52 ரன்கள் அடித்து, மீண்டும் சிறப்பான பேட்டிங் ஃபார்முக்கு திரும்பி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்களிப்பை அளித்திருக்கிறார்.

வெற்றிக்கு பின் பேசியிருக்கும் அவர் கூறும் பொழுது “எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் நான் போட்டியை முடிக்க விரும்புகிறேன். நான் இந்த போட்டியிலும் கடைசி வரை இருந்து போட்டியை முடிக்க விரும்பினேன். மேலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இருப்பதுதான் ஆசீர்வாதமும் சாபமும் ஆகும். பேட்டிங்பவர் பிளேவில் வெளியில் இரண்டு பில்டர்கள் மட்டுமே, ஆனால் நாங்கள் பேட்டிங் செய்யும் பொழுது வெளியில் 5 பீல்டர்கள் இருப்பார்கள். எனவே சரியாக கேப் கண்டுபிடித்து விளையாட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 உலககோப்பை ரேஸ்.. கேஎல் ராகுலுக்கு ரிவென்ஞ் எடுத்த சஞ்சு சாம்சன்.. களத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்

நான் நன்றாக தொடங்கினேன் ஆனால் என்னுடைய ஷாட் எல்லாமே பந்து நேராக பீல்டரிடம் சென்றது. இதனால் என்னிடம் வந்த சஞ்சு சாம்சன் கடினமாகச் செல்ல வேண்டாம். தேவையான நேரத்தை எடுத்துக்கொண்டு அமைதியாக விளையாடும்படி கூறினார். நான் இதற்குப் பின்பு என்னை நிலை நிறுத்திக் கொண்டு, ஒரே ஓவரில் 20 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தேன். நான் என் அப்பாவுக்காக விளையாடுகிறேன். அவர் ராணுவத்தில் இருந்தார், தற்பொழுதும் அங்குதான் இருக்கிறார். நான் சல்யூட் செய்து கொண்டாடுவது அவருக்காகத்தான்” என்று கூறியிருக்கிறார்.