“இந்தியாவுல ரசிகர்கள் எல்லோரும் எனக்கு எதிரா இருக்காங்களா?” – ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேச்சு

0
194
Virat

ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவில் 2018 ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பொழுது, அந்த அணியின் மதிப்பை இழந்ததோடு செயல்பாட்டிலும் பெரிய அளவில் பின்னடைவை சந்தித்தது.

இதற்குப் பிறகு புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வந்து ஆஸ்திரேலியா அணியை சீரமைப்பதில் ஓரளவுக்கு வெற்றி கண்டு 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்றார்.

- Advertisement -

ஆனாலும் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக வந்த பிறகுதான், ஆஸ்திரேலியா அணி தன்னுடைய பழைய ஆதிக்கத்தை செலுத்தும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது.

ஆசஸ் தொடரை உள்நாட்டில் வென்று, இங்கிலாந்தில் தக்க வைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை தொடரில் இந்திய அணியை வீழ்த்தி வென்றது என அவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலியா அணி மீண்டும் உச்சத்தை தொட்டு இருக்கிறது.

மேலும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் என்பது ஆக்ரோஷமானது. ஆனால் இனி எதிரணி வீரர்களை வார்த்தைகளால் எதுவும் செய்வது இல்லை என்றும், திட்டங்களில் மட்டுமே கவனமுடன் இருந்து விளையாடுவோம் என்றும் கூறி, தற்போது ஆஸ்திரேலியா அணியின் புதிய கலாச்சாரத்தை பாட் கம்மின்ஸ் உருவாக்கி வெற்றி கண்டு இருக்கிறார்.

- Advertisement -

நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய ரசிகர்களை மைதானத்தில் அமைதியாக்குவதே தங்கள் நோக்கம் என்று கூறி, அதை தனது பந்து வீச்சின் மூலம் செய்து காட்டியவர். எனவே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் தனக்கு எதிரானவர்களா? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து பாட் கம்மின்ஸ் கூறும்பொழுது “இந்தியா எனக்கு இரண்டாவது வீடு போன்றது. உங்களுக்கு எப்படியும் இந்தியாவில் சொந்தமாக விளையாட ஒரு ஐபிஎல் அணி இருக்கும். இதனால் உங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாக நீங்கள் உணர்வீர்கள். இல்லை ரசிகர்களை உங்களுக்கு தெரியும்.

அப்படியான ரசிகர்கள் உங்களை ஆதரிப்பார்கள். இல்லையென்றால் ரசிகர்கள் இருப்பதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள். முன்பு என்னிடம் வரும் ரசிகர்கள், நாங்கள் கொல்கத்தாவில் இருந்து வருகிறோம் கேகேஆர் அணி ரசிகர்கள் என்று கூறுவார்கள். எனவே இந்தியாவில் நமக்கு எல்லோரும் எதிரானவர்கள் இல்லை என்பது மகிழ்ச்சியான உணர்வு.

இதையும் படிங்க : 3 மாதத்தில் டி20 உலககோப்பை.. அதற்கு முன்னால் இந்திய அணிக்கு எத்தனை பயிற்சி போட்டிகள்.?.. முழு தகவல்கள்

நான் என்ன செய்கிறேனோ, அதை கவனமுடன் செய்வதில் எப்பொழுதும் நம்பிக்கையானவன். விராட் கோலி மிகச் சிறந்த வீரர். எனக்கு எதிராக சில முறை அவரும் அவருக்கு எதிராக சில முறை நானும் வெற்றி பெற்று இருக்கிறோம். நீங்கள் இவர்களுடன் விளையாடும் பொழுது போட்டியிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தால் மொத்தமாக வெளியே தள்ளி விடுவார்கள். எனவே அவருக்கு எதிராக விளையாடுவது என்பது சிறப்பான ஒரு விஷயம்” எனக் கூறியிருக்கிறார்.