“நாங்க மனுஷங்க இல்லையா?.. இப்படியே போனால் எல்லாரும் காயத்துல இருப்போம்” – சர்துல் தாக்கூர் பிசிசிஐ மீது விமர்சனம்

0
496
Shardul

இந்தியாவில் இருக்கும் மொத்தம் 38 உள்நாட்டு அணிகளை வைத்து, ரஞ்சி கிரிக்கெட் டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான ரஞ்சி சீசனின் அரையிறுதி போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.

ஒரு அரை இறுதியில் விதர்பா மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதி வருகின்றன. இன்னொரு அரை இறுதி போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன.

- Advertisement -

தமிழ்நாடு மும்பை அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 146 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது. மும்பை அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இதற்கடுத்து மும்பை தனது முதல் இன்னிங்ஸில் ஏழு விக்கெட்டுகளை 106 ரன்களுக்கு இழந்துவிட்டது. இதற்கு அடுத்து ஒன்பதாவது பேட்ஸ்மேனாக வந்த சர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் சதம் அடித்து 109 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இவரது அதிரடியின் காரணமாக மும்பை அணியின் ரஞ்சி இறுதிப் போட்டி வாய்ப்பு மிக அதிகமாகி இருக்கிறது.

தற்பொழுது ரஞ்சிப் போட்டி ஜனவரி மாதம் துவங்கி ஐபிஎல் தொடர் தொடங்குவதற்குள் முடிய இருக்கிறது. ஒரு அணி இறுதிப் போட்டிக்கு சென்று விளையாடி முடிக்க மொத்தம் பத்து போட்டிகள் விளையாட வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் வடிவம் என்கின்ற காரணத்தினால், வீரர்களுக்கு சரியான ஓய்வு கிடைப்பதில்லை.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள சர்துள் தாக்கூர் கூறும் பொழுது “அடுத்த ஆண்டு பிசிசிஐ இது குறித்து யோசித்து போட்டிகளுக்கு இடையே ஓய்வு நாட்களை அதிகரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். போட்டி அட்டவணங்கள் மிகவும் டைட்டாக மாறி வந்து கொண்டே இருக்கிறது.

இன்னும் இரண்டு சீசன்களுக்கு இப்படியே வீரர்கள் விளையாடினார்கள் என்றால், நிறைய வீரர்கள் காயம்பட்டு இருப்பார்கள். வெறும் மூன்று நாட்கள் இடைவெளியுடன் முதல் தரப் போட்டியை விளையாடுவது மிகவும் கடினம். இதுபோல இதற்கு முன்பு நடந்ததில்லை என்று நினைக்கிறேன்.

நான் ரஞ்சி டிராபி விளையாடத் தொடங்கிய காலத்தில் முதல் மூன்று போட்டிகளுக்கு இடையே மூன்று நாட்கள் ஓய்வும், நான்காவது போட்டிக்கு ஆரம்பித்து நான்கு நாட்கள் ஓய்வும், நாக் அவுட் சுற்றுக்கு ஐந்து நாட்கள் ஓய்வும் கொடுக்கப்பட்டு வந்தது.

இதையும் படிங்க : “தம்பி ஸ்டோக்ஸ்.. டெஸ்ட் கிரிக்கெட்ல மொத்தம் ரெண்டு இன்னிங்ஸ்பா” – வித்தியாச விமர்சனம் செய்த மைக்கேல் வாகன்

தற்பொழுது எல்லா போட்டிக்கும் இடையே மொத்தமாக மூன்று நாட்கள் மட்டுமே ஓய்வு கொடுக்கப்படுகிறது. எனவே ஒரு அணி இறுதிப் போட்டியை எட்டுகிறது என்றால், மொத்தம் பத்து போட்டியை மூன்று நாட்கள் இடைவெளி வைத்து மொத்தமாக விளையாட வேண்டும் என்று வீரர்களை எதிர்பார்ப்பது மிகவும் கடினம்” என்று கூறியிருக்கிறார்.