“தம்பி ஸ்டோக்ஸ்.. டெஸ்ட் கிரிக்கெட்ல மொத்தம் ரெண்டு இன்னிங்ஸ்பா” – வித்தியாச விமர்சனம் செய்த மைக்கேல் வாகன்

0
159
Vaughan

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவில் இங்கிலாந்து அணி தற்போது இழந்திருக்கிறது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி மூன்று போட்டிகளையும் இங்கிலாந்து அணி ஒரு போட்டியையும் வென்று இருக்கிறது.

பொதுவாக எடுத்துக் கொண்டால் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மோசமாக இருப்பதாக தெரியும். ஆனால் இங்கிலாந்து அணி விளையாடும் அதிரடியான முறைக்கு, இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியாது என்றுதான் ஆரம்பத்தில் கணிப்புகள் இருந்தது.

- Advertisement -

இந்த வகையில் பார்க்கும் பொழுது இங்கிலாந்து அணி எதிர்பார்த்ததை விட நன்றாகவே செயல்பட்டு இருக்கிறது என்று கூறலாம். மேலும் இங்கிலாந்து அணி மூன்று மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் முன்னிலையில் இருந்து தோல்வி அடைந்தது.

இந்த குறிப்பிட்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு கட்டத்தில், ஒரு இன்னிங்ஸில் நன்றாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி கோட்டை விட்டு தோற்றது. இந்த இரண்டு போட்டியில் ஒரு போட்டியில் இங்கிலாந்து சரியாக விளையாடு இருந்தால், நிச்சயம் இந்த தொடர் சமநிலைக்கு வந்திருக்கும்.

இந்த நிலையில் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற மார்ச் 7ஆம் தேதி இமாச்சல் பிரதேஷ் தரம்சாலா மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணிக்கு மைக்கேல் வாகன் ஆலோசனை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இங்கிலாந்து அணி நிர்வாகம் தனது வீரர்களை இன்னும் கொஞ்சம் ஆதரித்து இருந்தால் கூட நான் ஆச்சரியப்பட்டு இருக்க மாட்டேன். ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கலம் இருவரும் பொறுப்பேற்ற பிறகு ஒரே ஒரு வீரர் மட்டுமே கைவிடப்பட்டிருக்கிறார். அவர் அலெக்ஸ் லீஸ். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மரபார்ந்த முறையில் விளையாட கூடியவர்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் ஜாக் கிரவுலி உடன் அதிரடியான பென் டக்கெட் களம் இறங்க வேண்டும் என்கின்ற விருப்பம் இருந்தது. இதன் காரணமாகவே அந்த பேட்ஸ்மேன் வீழ்த்தப்பட்டார். இப்படி வீரர்களுக்கு அதிகபட்ச உத்திரவாதத்தை கொடுக்கும் பொழுது, அது சில நேரங்களில் தவறான பின் விளைவுகளை உண்டாக்கி விடலாம்.

ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்பது இரண்டு இன்னிங்ஸ் என்று ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன். அவர்கள் டெஸ்ட் தொடரில் ஒரு இன்னிங்ஸில் நன்றாக விளையாடிய இன்னொரு இன்னிங்ஸில் சொதப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : ஹசரங்கா விளையாட அதிரடி தடை.. ஏற்றுக்கொள்ள வேண்டும் என பயிற்சியாளர் பேச்சு.. என்ன நடந்தது?

சிறந்த அணிகளுக்கு எதிராக போட்டியை வெல்வதில் இங்கிலாந்து அணி தடுமாறிக் கொண்டிருக்கிறது. எனவே அவர்களுக்கு இந்த வாரத்தில் அணியை தேர்வு செய்வது என்பது சவாலான ஒன்றாக இருக்கும். எனவே அவர்கள் இதை ஞாபகத்தில் வைத்து செயல்பட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.