டி20 உலககோப்பை ரேஸ்.. கேஎல் ராகுலுக்கு ரிவென்ஞ் எடுத்த சஞ்சு சாம்சன்.. களத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்

0
1047
Sanju

ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும் அதேவேளையில், டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் தேர்வாவதற்கான போட்டியும் ஐபிஎல் தொடரில், இந்திய வீரர்களிடையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று லக்னோ ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் கேஎல்.ராகுல் சஞ்சு சாம்சன் இடையே இப்படி ஒரு போட்டி நடைபெற்றிருக்கிறது.

தற்பொழுது டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் யார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருந்து கொண்டு வருகிறது. இதுகுறித்து வெளியில் பல முன்னாள் வீரர்கள் பலவிதமான தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணிக்கான விக்கெட் கீப்பர்களில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இருக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போட்டிதான் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

தற்பொழுது இந்த போட்டியில் லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடும் கேப்டன் கேஎல்.ராகுல், ராஜஸ்தான் அணிக்கு மூன்றாவது இடத்தில் விளையாடும் கேப்டன் சஞ்சு சாம்சன் இடையே தான் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று இரண்டு அணிகளும் மோதிய போட்டியில் லக்னோ அணிக்காக கேப்டன் கேஎல்.ராகுல் சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இன்று அவருடைய அரைசத கொண்டாட்டம் வெறித்தனமாக இருந்தது . எப்பொழுதும் அமைதியாக காணப்படும் அவர் இன்று, டி20 உலகக் கோப்பைக்கான ரேசில் முந்தியதாக உணர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : துருவ் ஜூரலை நான் நம்பறேன்.. அவர் யார் என்னனு அங்க பார்த்திருக்கேன் – சஞ்சு சாம்சன் பேட்டி

இதற்கு அடுத்து ராஜஸ்தான் 78 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் வெறும் 33 பந்துகளில் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 71 ரன்கள் குவித்து, கடைசியாக சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் அணியை வெல்ல வைத்தார். அப்பொழுது வழக்கத்திற்கு மாறாக சஞ்சு சாம்சன் மிகவும் ஆக்ரோஷமாக வெற்றியை கொண்டாடினார். இருவருக்குள்ளும் டி20 உலக கோப்பையில் யார் தேர்வாவது? என்கின்ற போட்டி, இன்று களத்தில் அப்பட்டமாக வெளிப்பட்டது உண்மை. தற்பொழுது சஞ்சு சாம்சன் ரேசில் முன்னணிக்கு வந்திருக்கிறார்!