இந்திய அணி பயிற்சியாளர் பதவி.. தோனியிடம் உதவி கேட்கும் பிசிசிஐ.. சிஎஸ்கேவை விட்டு தருவாரா?

0
31
Dhoni

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்பொழுது இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. இதன் காரணமாக புதிய பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் வாரியம் தேடிவருகிறது. இதில் தற்போது முக்கியமான ஒரு காரணத்திற்காக தோனியின் உதவியை பிசிசிஐ நாடி இருக்கிறது.

ராகுல் டிராவிட்டுக்கு ஆரம்பத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் விருப்பமில்லை. ஏனென்றால் ஐபிஎல் காலம் தவிர அனைத்து நேரமும் இந்திய அணியுடன் அவர் இணைந்து இருக்க வேண்டிய தேவை இருந்தது. பின்பு கங்குலியின் வற்புறுத்தல் காரணமாகவே அவர் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

- Advertisement -

தற்பொழுது அவரது பதவிக்காலம் முடிவடைய இருக்கின்ற காரணத்தினால், புதிய பயிற்சியாளரை தேடி வரும் பிசிசிஐ ஸ்டீபன் பிளமிங், மகேலா ஜெயவர்த்தனா, ரிக்கி பாண்டிங், கவுதம் கம்பீர் என பலரை அணுகி வருகிறது. இதில் கம்பீருக்கு பெரிய முன்னுரிமை இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இந்த நிலையில் தற்போது வரும் செய்திகள் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்கைதான் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகம் விரும்புவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரும் ராகுல் டிராவிட் போலவே அதிக காலம் ஆண்டு முழுவதும் இந்திய அணியுடன் இணைந்து இருப்பதை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஸ்டீபன் பிளமிங்கை சமாதானம் செய்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கு தோனியின் உதவியை பிசிசிஐ நாடி இருக்கிறது. ஏனென்றால்அணியில் இருவருக்கும் நல்ல உறவு இருந்து வருகிறது. இதன் காரணமாக தோனியை வைத்து பேச்சுவார்த்தை நடத்த பிசிசிஐ விரும்புகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பண்ட் வேண்டாம்.. இது வேற மாதிரியான சஞ்சு சாம்சன்.. பையனை யூஸ் பண்ணுங்க – ஹர்பஜன் சிங் கருத்து

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரத்தில் தெரிவித்ததாக பிரபல நாளிதழில் வந்த செய்தியில் “பிளமிங் இந்திய பயிற்சியாளர் பொறுப்பை வேண்டாம் என்று மறுக்கவில்லை. ஒப்பந்தத்தின் காலம் குறித்து அவர் தனது கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். இது ஒன்றும் அசாதாரணமான விஷயம் கிடையாது. ஆரம்பத்தில் ராகுல் டிராவிட் கூட இதற்கு சம்மதிக்கவில்லை. தற்பொழுது பிளம்மிங் உடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஐபிஎல் நேரத்தில் தோனியிடம் இது சம்பந்தமாக பேசுவது சரியானதாக இருக்காது என்று நினைத்தோம். இப்பொழுது அவரிடம் இது குறித்து பேசுவது சரியாக இருக்கும்” என்று கூறப்பட்டிருக்கிறது.