நல்லா தெரியும்.. விராட்டுக்கு இத மட்டும் செய்யுங்க போதும்.. டெஸ்ட் சீரிஸ் நமக்குதான் – ஷேன் வாட்சன் அறிவுரை

0
245
Watson

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் அறிவுரை கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு நல்ல வரலாறு இருக்கிறது. அவர் இதுவரையில் ஆறு டெஸ்ட் சதங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் அடித்திருக்கிறார். மேலும் கேப்டனாக ஒரு முறை ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரையும் வென்று இருக்கிறார்.

- Advertisement -

விராட்டை பற்றி எனக்கு தெரியும்

விராட் கோலி குறித்து ஷேன் வாட்சன் கூறும்பொழுது ” விராட் கோலி பற்றி எனக்கு மிகவும் தெரிந்த விஷயம் என்னவென்றால், அவருக்குள் எப்பொழுதும் ஒரு நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும். அது மிகவும் பிரகாசமாகவும் ஆழமாகவும் இருக்கக்கூடியது. இதன் காரணமாக அவர் ஒவ்வொரு பந்திலும் அதி தீவிரத்தை கொண்டு வருவார். அவர் ஒரு சூப்பர் ஹியூமன் போல இருக்கக்கூடியவர்”

“ஆனால் சமீப காலத்தில் இந்த நெருப்பு அவரிடம் அணைந்த தருணங்களும் இருக்கவே செய்கிறது. இப்படிப்பட்ட தீவிரத்தை ஒவ்வொரு பந்திலும் பராமரிப்பது கடினமான ஒன்று. ஆஸ்திரேலியா இந்த இடத்தில் தான் அவரை எதுவும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டு மற்றவர்களை குறி வைத்து வேலை செய்ய வேண்டும். இப்படி நடக்கும் பொழுது அவர் ஒவ்வொரு பந்திலும் தீவிரத்தை கொண்டு வர மாட்டார்”

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற ரகசியம்

“விராட் கோலி ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்ற தருணங்களை எடுத்து பார்க்கும் பொழுது அவர் ஒவ்வொரு பந்திலும் தீவிரத்தை காட்டி இருந்தார். அவர் ஒவ்வொரு பந்திலும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். இதனால் அவருக்கு கவனம் கொஞ்சம் கூட சிதறவே கிடையாது. இப்படியான நேரத்தில்தான் அவர் மிகவும் முழுமையான சிறந்த நிலையில் இருக்கிறார்”

இதையும் படிங்க : ஆஸி அணிக்கு எதிரா.. எங்களோட ஒட்டுமொத்த பிளான் இதுதான்.. இத செஞ்சா போதும் – பும்ரா பேட்டி

“நீங்கள் விராட்டை தவிர்த்து விட்டு, அவரைச் சுற்றி சத்தம் குறைவாக இருக்கும் பொழுது அவரிடம் அந்த தீவிரத்தை பார்க்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது விராட் கோலிக்கு சிறந்த தொடராக அமையாது. இதனால் நாம் வெற்றி பெறுவோம்” என்று நம்புகிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -