அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வேறு புதிய இரண்டு வீரர்களை வாங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களாக சிஎஸ்கே அணிக்கு ஹர்திக் பாண்டியா வரவேற்கிறார் என்றும், சிவம் துபே மற்றும் ஆயுஸ் மாத்ரே இருவரும் மும்பை அணிக்கு கொடுக்கப்பட இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி சன் ரைசஸ் ஹைதராபாத் அணியிடம் டிரேடிங் செய்த வீரர்களை பரிமாறிக் கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சிஎஸ்கே தங்களிடமிருந்த கலீல் அகமது மற்றும் நாதன் எல்லீஸ் இருவரையும் கொடுத்து இங்கிலாந்தின் லியான் லிவிங்ஸ்டன், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை வாங்கி உள்ளது.
தற்போது சிஎஸ்கே தங்களது பிளேயிங் லெவனில் இடம் பெறக்கூடிய தகுதி வாய்ந்த சிறந்த இரண்டு பவுலர்களை கொடுத்து இருப்பது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இது குறித்து அவர்கள் கடுமையான விமர்சனத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.






