பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் பும்ரா போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு என்ன செய்தி கூறப்பட்டிருக்கிறது? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
மேற்கு ஆஸ்திரேலியா பெர்த் மைதானத்தில் வருகின்ற நவம்பர் 22ஆம் தேதி இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விளையாடாததால் பும்ரா கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார்.
பெர்த்தில் அரங்கேற இருக்கும் அரிய நிகழ்வு
இந்த முறை முதல் டெஸ்ட் போட்டிக்கு டாஸ் போடப்படும் நிகழ்வில் கேப்டனாக ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிக்கு இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வருவார்கள் என்பது மிகவும் சுவாரசியமான விஷயமாக அமைந்திருக்கிறது. இப்படியான சம்பவம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அமைவது மிகவும் ஆச்சரியமான ஒன்று.
பும்ராவை பொறுத்தவரையில் கேப்டன் பதவியில் ஆர்வம் உடையவராக எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறார். வேகப்பந்துவீச்சாளர்களால் கேப்டன் பதவியில் மிகச் சிறப்பாக செயல்பட முடியும் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். மேலும் இதற்காகத்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் போய் நிற்கப் போவது கிடையாது என்பதையும் தெளிவு படுத்தி இருந்தார்.
எங்களுடைய திட்டம் இதுதான்
இந்த நிலையில் நடைபெற இருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களுக்கு என்ன மாதிரியான செய்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது? என்றும், இந்திய அணிக்கு ஒட்டுமொத்தமான திட்டமாக என்ன இருக்கிறது? என்பது குறித்தும் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் பும்ரா தெளிவுபடுத்தி பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க : எங்க ஆஸி டீம்.. இந்திய அணிக்கு எதிரா முட்டாள்தனமான இந்த காரியத்தை செய்யாது – மைக்கேல் கிளார்க் பேட்டி
இதுகுறித்து கேப்டன் பும்ரா கூறும் பொழுது “எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை முக்கியமானது. நாங்கள் அதையே முதலீடாக கொண்டிருக்கிறோம். எங்கள் அணியில் நாங்கள் நடத்தும் உரையாடல் என்ன என்றால், நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து, உங்களுடைய தயாரிப்பில் கவனம் செலுத்தும் பொழுது, அது சிறந்த நிலையில் வைக்கிறது என்பதுதான். அப்படி செய்தால் மற்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக் கொள்ளும்” என்று கூறியிருக்கிறார்.






