மத்தவங்க அதுக்கு லாயக்கே இல்ல.. டான்ஸ் ஆடுறாங்க.. விராட் நீ மட்டும் எப்படிப்பா அதை செய்யற – ஸ்ரீகாந்த் பாராட்டு

0
0

​நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒடிஐ போட்டியில் விராட் கோலி அடித்த அதிரடி 74 ரன்கள் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பாராட்டி பேசி இருக்கிறார்.

​இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் ஒடிஐ போட்டியை ஆய்வு செய்து இந்திய முன்னாள் கேப்டன் கே ஸ்ரீகாந்த் பேசியுள்ளார். இதில் விராட் கோலியின் இன்னிங்ஸ் மற்றும் அன்ஷுல் கம்போஜின் பவுலிங் குறித்து அவர் பாராட்டி பேசியுள்ளார்.

- Advertisement -

​நியூசிலாந்தின் பவுலிங் தாக்குதலை சமாளித்து விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆக்லாந்து விக்கெட்டில் இரு அணிகளின் பேட்டர்களும் ரன் அடிக்க சிரமப்பட்ட நிலையில் கோலி மிக எளிதாக ரன்களை குவித்தார்.

​இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “இந்த விக்கெட்டில் இரண்டு அணிகளையும் சேர்ந்த அனைவரும் டான்சிங் ஆடிக்கொண்டிருந்தனர், ஆனால் இவர் மட்டும் மிக எளிதாக விளையாடுகிறார். அவர்களுக்கு ஆஃப் ஸ்டம்ப்-க்கு வெளியே எதுவுமே கொடுக்காமல், ஷார்ட் டெலிவரி மூலம் அவரை சோதிக்க முயன்றனர். ஆனால் அவர் அவற்றை மிக எளிதாக புல் செய்து முழு கண்ட்ரோல்-டன் விளையாடினார். அவர் பவுலர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தார்”

- Advertisement -

“​கம்போஜ் சிறந்த கம்பேக் கொடுத்தார். சிஎஸ்கே அணிக்கும் இது மிகவும் நல்லது, ஏனெனில் அவர் சிறந்த ஓபனிங் பவுலர்-ஆக உருவெடுத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவரது பேஸ் சற்று குறைவாக உள்ளது, ஆனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும் போது அதில் முன்னேறுவார். நியூசிலாந்து அணியை அவர்களின் சொந்த கண்டிஷன்ஸ்-இல் தடுமாற வைத்தது அனைத்து இந்திய பவுலர்களின் சிறந்த செயல்திறன் ஆகும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -