இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னொரு சூரியகுமார் கிடைச்சிட்டார்.. இனிமே அறுவடை பண்ணலாம் – ஷேன் பாண்ட் பேச்சு

0
7932
Surya

தற்பொழுது ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் தொடர்ச்சியாக முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்த வருட ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருக்கும் சூரியகுமார் யாதவ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைக்காதது, அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. தனி ஒரு பேட்ஸ்மேனாக மாயாஜாலங்கள் செய்யக்கூடிய அவர் இல்லாதது எந்த அணிக்குமே பெரிய இழப்பாகத்தான் இருக்கும்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் முடிந்து டி20 உலக கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இரு நாடுகளில் நடைபெற இருக்கின்ற காரணத்தினால். சூரியகுமார் யாதவை அவசரப்பட்டு ஐபிஎல் தொடருக்குள் கொண்டுவர பிசிசிஐ அனுமதிக்கவில்லை. இந்த விஷயத்தில் பிசிசிஐ தற்பொழுது மிகவும் கண்டிப்பாக இருக்கின்ற காரணத்தினால், சூரியகுமார் யாதவுக்கு தேவையான ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்படி ஒரு இழப்பு என்றால், விளையாடிய மூன்று போட்டிகளையும் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக் சொத்தாக மாறி இருக்கிறார்.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் சேன் பாண்ட் கூறும் பொழுது “ரியான் பராக் சில வருடங்களுக்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்த சூரிய குமார் யாதவை எனக்கு நினைவூட்டுகிறார். இந்த இளைஞருக்கு வயது 22 என்றாலும் அவரைப் போன்ற திறமை இருக்கிறது. ரியான் பராக்கு இந்த முறை சிறந்த உள்நாட்டு சீசன் இருந்தது. படிக்கலை கொடுத்துவிட்டு ஆவேஷ் கானை டிரேடிங் செய்தது, ரியான் பராக் பேட்டிங் வரிசையில் மேலே வர உதவியது.

ஐபிஎல் தொடரில் ரியான் பராக் மிகவும் இளம் வயதில் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 17 என்பதை நாம் மறந்து விடுகிறோம். மேலும் அவருக்கு பேட்டிங்கில் ஆறாவது இடம் கொடுக்கப்பட்டது. பொதுவாக இந்த இடத்தில் போட்டியை முடிக்க விளையாடும் வீரர்கள் பெரிய அனுபவம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி 21 வயசு இந்த இந்திய பையன சமாளிக்க முடியுமா? காத்துகிட்டு இருக்கேன் – ஸ்டூவர்ட் பிராட் பேட்டி

தற்பொழுது இப்படியான பேட்டிங் இடத்தில் டிம் டேவிட் மற்றும் டேவிட் மில்லர் போன்ற பெரிய உலகத் தரமான வீரர்கள் இருந்து வருகிறார்கள். ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இதை ரியான் பராக் சிறுவயதிலேயே செய்தார். அவருக்கு அதனால் நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவர் மீது செய்த முதலீட்டுக்கு தற்பொழுது அறுவடை செய்யும் நேரம் இது” எனக் கூறியிருக்கிறார்.