விராட் கோலி 21 வயசு இந்த இந்திய பையன சமாளிக்க முடியுமா? காத்துகிட்டு இருக்கேன் – ஸ்டூவர்ட் பிராட் பேட்டி

0
110
Virat

17ஆவது ஆண்டாக நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 லீக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளையும் வென்று, புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளையும் தோற்று இருக்கிறது.

இந்த நிலையில் இன்று பதினேழாவது ஐபிஎல் சீசனில் 15ஆவது போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதிக்கொள்ள இருக்கின்றன. முதல் போட்டியில் லக்னோ அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்து இருந்தாலும், தற்போது அந்த அணி பேட்டிங் பந்துவீச்சு என சிறப்பாக இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமும் இருக்கிறது பலவீனமும் இருக்கிறது. அவர்களுக்கு இன்னும் ஒரு சரியான பிளேயிங் லெவன் கிடைக்கவில்லை. மேலும் இன்றைய போட்டியில் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய லக்னோ அணியின் இந்திய இளம் வீரர் மயங்க் யாதவ் இந்த போட்டியில் மிகவும் கவனிக்க வேண்டிய சுவாரசியமான வீரராக இருக்கிறார்.

இதுகுறித்து ஸ்டூவர்ட் பிராட் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் மயங்க் யாதவ் இடையில் நடக்க இருக்கும் போரை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். மயங்க் யாதவுக்கு நாம் அடிக்கடி பார்க்க முடியாத சிறந்த ஐபிஎல் அறிமுகம் கிடைத்தது. அவர் மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினார். மேலும் உலகத்தரமான பேட்ஸ்மேன்களை திணற வைத்து, வேகம் மட்டும் இல்லாமல் லைன் மற்றும் லென்த்தில் நல்ல கண்ட்ரோல் வைத்திருந்தார். எனவே இவர்களுக்கு இடையே நடக்க இருக்கும் இந்த கிரிக்கெட் போர் ஆவலை தூண்டுகிறது.

மேலும் உலகில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிறப்பான மைதானங்களில் ஒன்றான பெங்களூர் சின்னசாமி மைதானம் நிச்சயமாக 21 வயதான இந்த இளம் வேகப்பந்துவீச்சாளருக்கு சவாலான ஒன்றாக இருக்கும். அதே சமயத்தில் இப்படியான இடத்திலிருந்துதான் நல்ல கற்றல்கள் கிடைக்கும். மேலும் அவர் முதல் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கின்ற காரணத்தினால், அவர் இந்த போட்டியிலும் சில விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க: மீண்டும் மாற்றப்பட்ட ஐபிஎல் 2024 அட்டவணை.. இரண்டு முக்கிய போட்டிக்கான தேதிகள் மாற்றம்.. முழு தகவல்கள்

பெங்களூர் அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் உலகத்தரமான பேட்ஸ்மேன் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய பவுலிங் யூனிட் மிகவும் பரிதாபமாக இருக்கிறது. அல்ஜாரி ஜோசப் இடத்தில் பெர்குஷன், டாப்லி ஆகியோர் கொண்டுவரப்படலாம். இதிலிருந்து வேகம் மற்றும் வித்தியாசமான கோணம் பந்துவீச்சில் கிடைக்கும். இந்த வகையில் பெங்களூரு அணியின் பவுலிங் யூனிட்டை பலப்படுத்த பார்க்கலாம்” என்று கூறி இருக்கிறார்.