1 பந்துக்கு 14 ரன் கொடுத்த ஷாமர் ஜோசப்.. முதல் ஐபிஎல் போட்டியிலே வினோத சோகமான சம்பவம்

0
761
Joseph

இன்று ஐபிஎல் தொடரில் நடைபெறும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் லக்னோ அணிக்கு வெஸ்ட் இண்டிஸ் இன் இளம் சூப்பர் ஸ்டார் ஷாமர் ஜோசப் அறிமுகமானார்.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 10(8), கேப்டன் கே எல் ராகுல் 39 (27), தீபக் ஹூடா 8(10), ஆயுஸ் பதோனி 27(29) ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 10(5), நிக்கோலஸ் பூரன் 45 (32), க்ருனால் பாண்டியா 7*(8), அர்ஷத் கான் 5(4) ரன்கள் எடுத்தார்கள். லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியின் தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 4 ஓவர்களுக்கு 28 ரன்கள் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து கொல்கத்தா இலக்கை நோக்கி களம் இறங்கியது. லக்னோ அணியின் தரப்பில் அறிமுக வீரர் வெஸ்ட் இண்டிஸ் ஷாமர் ஜோசப் முதல் ஓவரை வீச வந்தார். முதல் ஓவரின் 5 பந்துகளில் எட்டு ரன்கள் மட்டும் கொடுத்து நல்லபடியாக ஆரம்பித்தார். இதில் இரண்டு பந்துகள் அருமையாக இருந்தது. எனவே அவருக்கு சிறப்பான ஐபிஎல் அறிமுகம் காத்திருப்பதாக தோன்றியது.

இந்த நிலையில் ஓவரின் கடைசிப் பந்தை நோ-பால் ஆக வீசினார். அடுத்து வைடு, அடுத்து மீண்டும் நோ-பால், மீண்டும் வைடு, மீண்டும் வைடு பவுண்டரி, மீண்டும் நோ-பால், கடைசிப் பந்தில் சிக்ஸர் என மொத்தம் ஒரு பந்தை வீசுவதற்கு 14 ரன்கள் விட்டுக் கொடுத்தார். தன்னுடைய ஐபிஎல் அறிமுகத்தின் முதல் ஓவரில் பரிதாபமாக 22 ரன்கள் வாரிக் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : ரோகித் சூர்யாவை அடக்க இந்த சிஎஸ்கே பவுலர் மட்டுமே போதும்.. மும்பை ரொம்ப கஷ்டப்பட போறாங்க – கவாஸ்கர் பேச்சு

மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வந்து சாதித்திருக்கும் அவர் ஐபிஎல் தொடரிலும் சாதிக்க வேண்டும் என பல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அவரது அறிமுகம் சீக்கிரம் வரவேண்டும் எனவும் காத்திருந்தார்கள். இந்த நிலையில் தான் இப்படி ஒரு வினோத சோகமான முதல் ஓவர் அவருக்கு அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!