ரோகித் சூர்யாவை அடக்க இந்த சிஎஸ்கே பவுலர் மட்டுமே போதும்.. மும்பை ரொம்ப கஷ்டப்பட போறாங்க – கவாஸ்கர் பேச்சு

0
155
Gavaskar

தற்போது நடப்பு 17 வது ஐபிஎல் சீசனில் இன்று மும்பை வான்கடை மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொள்ளும் மிக முக்கியமான போட்டி நடைபெற இருக்கிறது. இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் சிஎஸ்கே அணியின் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளருக்கு திணறுவார்கள் என கவாஸ்கர் கணித்திருக்கிறார்.

தற்போது 5 போட்டிகளில் விளையாடி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று, வெளியில் விளையாடிய இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து, புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

அதே சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெளியில் விளையாடிய இரண்டு போட்டிகள் மற்றும் சொந்த மைதானத்தில் விளையாடிய ஒரு போட்டி என தொடர்ந்து மூன்று போட்டியில் தோற்று, இதற்கு அடுத்து சொந்த மைதானத்தில் தொடர்ந்து இரண்டு போட்டியில் வென்று, புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்து வருகிறது.

இந்தப் போட்டியில் வெல்வது இரண்டு அணிகளுக்குமே மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் சொந்த மைதானத்தில் விளையாடுகின்ற காரணத்தினாலும், அணியில் அதிரடியான பேட்ஸ்மேன் இருக்கின்ற காரணத்தினாலும், ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சாளராக பும்ரா இருப்பதாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுனில் கவாஸ்கர் முஸ்தபிசுர் ரஹ்மானை வைத்து பேசும்பொழுது “ஆடுகளத்தில் இருந்து பந்து நன்றாக பேட்டுக்கு வருவதை ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் போன்ற பேட்ஸ்மேன்கள் மிகவும் விரும்புகிறார்கள். அதே சமயத்தில் பந்து கொஞ்சம் மெதுவாக வரும் பொழுது எல்லோருக்கும் தடுமாற்றம் இருக்கிறது. மெதுவான முறையில் பந்து வீசுவதில் முஸ்தபிசுர் ரஹ்மான் திறமையானவர். அவரது பந்தை ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் இருந்து ஸ்வீப் அடிக்க முயற்சி செய்து, உள் வட்டத்திலோ அல்லது வெளியிலோ கேட்ச் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- Advertisement -

இதையும் படிங்க : கண்ணு கலங்குது.. தோனியின் கடைசி வான்கடே போட்டி.. மும்பை ரசிகர்கள் செய்த செயல்.. நெகிழ்ச்சி வீடியோ

நடப்பு ஐபிஎல் தொடரில் முஸ்தபிசுர் இதுவரை பந்து வீசிய விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அவர் மெதுவான பந்துகள் மற்றும் மெதுவான பவுன்சரை வீசும் விதம் ஏற்கனவே அவர் வீசி வந்ததை விட சிறப்பாக இருப்பதை பார்க்க முடிகிறது. தற்பொழுது அவர் நம்பிக்கையுடன் மாறுபட்ட சிறந்த பந்துவீச்சாளராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.