என் மருமகன் ஷாகினுக்கு இதை பாபர் செஞ்சிருக்க கூடாது.. மரியாதையே போயிடுச்சு – ஷாகித் அப்ரிடி விமர்சனம்

0
420
Afridi

கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்த காரணத்தினால், மூன்று வடிவ பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் பாபர் அசாம் விலகிக் கொண்டார். இதற்கு அடுத்து ஷாகின் அப்ரிடி வெள்ளைப்பந்து வடிவத்திற்கு கேப்டனாக கொண்டுவரப்பட்டார். ஆனால் மீண்டும் அவர் நீக்கப்பட்டு பாபர் அசாம் கேப்டனாக கொண்டுவரப்பட்டார் தற்பொழுது இதுகுறித்து ஷாஹித் அப்ரிடி விமர்சனம் செய்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் ஒட்டுமொத்த அணியின் செயல்பாடு மட்டும் இல்லாமல், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்சியும் மோசமாக இருந்தது என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தான் அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எல்லா வடிவ கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். இதற்கு அடுத்து ஷாகின் அப்ரிடி பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனாக கொண்டுவரப்பட்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டி20 தொடர்களில் மட்டுமே கேப்டனாக இருந்தார். ஆனால் டி20 உலக கோப்பைக்கு அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு பழைய கேப்டன் பாபர் அசாம் கொண்டுவரப்பட்டார். தற்பொழுது பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து ஷாஹித் அப்ரிடி பேசும்பொழுது ” பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஷாகின் அப்ரிடியை கேப்டனுக்கு கொண்டுவந்து டி20 உலக கோப்பை வரை மட்டுமே அவரை வைத்திருக்கும் என்று கூறியிருந்தால், பாபர் அசாம் அவரையே முழுமையாக கேப்டனாக இருப்பதற்கு ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும். ஷாகின் உடன் நான் விளையாடியிருக்கிறேன் எனவே அவரே கேப்டனாக இருக்க வேண்டும் என்று கூறி இருக்க வேண்டும்.

பாபர் அசாம் தொடர்ந்து ஷாகின் அப்ரிடி கேப்டனாக இருப்பதற்கு ஆதரவு கொடுத்து அவரது தலைமையின் கீழ் விளையாடி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பாபர் அசாமின் மதிப்பு உயர்ந்திருக்கும். அந்த முடிவு ஒரு முன் உதாரண முடிவாக இருந்திருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ரா இத செஞ்சிட்டா முடிஞ்சது.. ஆசியாவுல வாசிம் அக்ரமுக்கு பின்னாடி அவர்தான் – எல் பாலாஜி கருத்து

மேலும் இந்த விஷயத்தில் பாபர் அசாமை மட்டுமே தனியாக பழி சொல்ல முடியாது. இதில் தற்போதைய தேர்வு குழுவின் மீதும் பழி இருக்கிறது. அவர்கள் ஒரு கட்டத்தில் பாபர் அசாம் நல்ல கேப்டன் இல்லை என்றும் கூறியிருந்தார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.