வினோதமான காயம் வந்தது.. கடுமையா உழைச்சேன்.. டிராவிட் சொன்னதுதான் இப்ப எனக்கு நடக்குது – ஹர்திக் பாண்டியா பேட்டி

0
406
Hardik

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஏறக்குறைய அரைஇறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் கலந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 24 பந்தில் 36 ரன்கள், சிவம் துபே 24 பந்தில் 34 ரன்கள் எடுத்தார்கள். ஒரு முனையில் தனித்து நின்று அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா ஆட்டம் இழக்காமல் 27 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதன் காரணமாக இந்திய அணிக்கு நல்ல ரன் ரேட் கிடைத்திருக்கிறது. மேலும் இரண்டு வெற்றியும் பெற்று இருப்பதால் ஏறக்குறைய அரைஇறுதிக்குள் சென்று விட்டது என்று கூறலாம்.

இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மிக முக்கியமான நேரத்தில் தன்னுடைய அதிரடியை குறைத்துக் கொள்ளாமல் இந்திய அணியை நல்ல ஸ்கோருக்கு அரைசதம் அடித்துக் கொண்டு சென்றார். மேலும் பந்து வீச்சில் லிட்டன் தாஸ் விக்கெட்டை கைப்பற்றி இந்திய அணிக்கு முதல் விக்கெட்டையும் எடுத்துக் கொடுத்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்டியா பேசும் பொழுது “நாங்கள் நன்றாக விளையாடினோம். மேலும் நாங்கள் எங்களுடைய திட்டங்களில் நன்றாக ஓட்டிக்கொண்டு அதைச் செயல்படுத்தினோம். பேட்ஸ்மேன்கள் காற்று அடிக்கும் திசையை பயன்படுத்திக் கொள்ள பார்த்தார்கள்.எனவே அந்த திசைக்கு எதிர்த் திசையில் பந்து வீசுவதை உறுதி செய்தேன். இது பேட்ஸ்மேனை விட ஒரு படி மேலே இருப்பது.

இதையும் படிங்க : 50 ரன்.. பும்ரா ஸ்பெஷல் சாதனை.. பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா.. அரை இறுதியில் நுழைந்ததா?

ஒரு குழுவாக நாம் பல இடங்களில் சிறப்பாக இருக்க முடியும். நாங்கள் சில நேரங்களில் விக்கெட்டுகளை வேகமாக இழந்து விடுகிறோம். இதை நாங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். மற்றபடி நாங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கிறோம்.எனக்கு முன்பு வினோதமான காயம் ஏற்பட்டது. நான் அதிலிருந்து வெளியே வர விரும்பி கடுமையாக உழைத்தேன். எப்பொழுதும் கடினமாக உழைக்கும் நபர்களுக்கு அதிர்ஷ்டம் வரும் என ராகுல் டிராவிட் சார் சொன்னார்.அவரது வார்த்தை எனக்குள் ஒட்டிக்கொண்டது. மேலும் நான் தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -