சதம் அரைசதம் எல்லாம் மேட்டரே கிடையாது.. எனக்கு அந்த விஷயம் மட்டும்தான் முக்கியம் – ரோகித் சர்மா பேச்சு

0
670
Rohit

ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக மாறியிருக்கிறது. இந்த போட்டியின் வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசியிருக்கிறார்.

கடந்த போட்டி போலவே இந்த போட்டியிலும் இந்திய மிடில் ஆர்டர் சிறப்பாக விளையாடியது. தேவையான நேரத்தில் சிவம் துபாய் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சேர்ந்து 34 பந்தில் 53 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இறுதிவரை ஆட்டம் இழக்காத ஹர்திக் பாண்டியா 27 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணிக்கு அந்த அணியின் கேப்டன் நஜீபுல் சாந்தோ மற்றும் தாக்குப்பிடித்து விளையாடி 32 பந்தில் 40 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய பங்களாதேஷ் அணியால் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, பங்களாதேஷ் அணி ஏறக்குறைய நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பில் வெளியேறிவிட்டது.

வெற்றிக்கு பின் பேசியிருக்கும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா “எங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது, என்ன செய்ய வேண்டும், என்ன விளையாட வேண்டும் என்பது குறித்து எங்களுக்கு நன்றாகத் தெரியும்.நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டோம். மேலும் இங்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய விஷயமாக காற்று ஒரு முக்கிய காரணியாக இருந்தது.

- Advertisement -

மேலும் நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சை என இரண்டிலுமே புத்திசாலித்தனமாக இருந்தோம். இன்று 196 ரன்கள் எடுத்தோம். ஆனால் எங்கள் அணியில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 50 ரன்கள்தான். எனவே இந்த கிரிக்கெட் வடிவத்தில் சதம் மற்றும் அரை சதத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. பவுலர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம்தான் முக்கியம்.

இதையும் படிங்க : வினோதமான காயம் வந்தது.. கடுமையா உழைச்சேன்.. டிராவிட் சொன்னதுதான் இப்ப எனக்கு நடக்குது – ஹர்திக் பாண்டியா பேட்டி

நாங்கள் அனைவருமே இந்த வழியில் சென்று விளையாடவே விரும்புகிறோம். ஹர்திக் பாண்டியா இன்று பேட்டிங்கில் சிறப்பாக இருந்தார். அவரால் என்ன செய்ய முடியும் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும். அவர் இந்த தொடர் முழுக்க இதைத் தொடர்ந்தால் மிகச் சிறப்பானதாக இருக்கும். இன்று ஹர்திக் பாண்டியா போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் முக்கியமான வீரராக இருந்தார்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -