பும்ரா இத செஞ்சிட்டா முடிஞ்சது.. ஆசியாவுல வாசிம் அக்ரமுக்கு பின்னாடி அவர்தான் – எல் பாலாஜி கருத்து

0
281
Bumrah

தற்போது உலகக் கிரிக்கெட்டில் முழுமையான வேகப் பந்துவீச்சாளராக இந்தியாவின் ஜஸ்பரித் பும்ரா இருந்து வருகிறார். மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அவருக்கு நிகரான வேகப்பந்துவீச்சாளர்கள் தற்பொழுது யாரும் இல்லை. இந்த நிலையில் வாசிம் அக்ரமுக்கு பிறகு ஆசியாவின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர் பும்ராதான் என இந்திய முன்னாள் வீரர் லட்சுமிபதி பாலாஜி கூறியிருக்கிறார்.

கிரிக்கெட்டின் எந்த வடிவமாக இருந்தாலும், மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் எந்த நேரமாக இருந்தாலும் பும்ரா பந்துவீச்சில் ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. ஒரு ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை அவர் வேகத்திற்கு யாராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை.

- Advertisement -

பும்ரா தன்னுடைய வேகப்பந்து வீச்சில் எந்த அளவுக்கு திறமையானவரோ, அதேபோல ஆடுகளத்தைக் கணிப்பதில் யாரையும் விட திறமையானவர். தான் வீசும் முதல் ஓவரின் சில பந்துகளிலேயே அவர் ஆடுகளத்தைக் கணித்து விடுகிறார். அதற்குப் பிறகு எந்த காரணத்திற்காகவும் குறிப்பிட்ட ஆடுகளத்திற்கு தேவையில்லாத பந்துகளை அவர் வீசுவதை கிடையாது.

இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பும்ரா மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். தற்போது நடைபெற்றுக் கொண்டு வரும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் அவருடைய பந்துவீச்சு வழக்கம்போல் சிறப்பாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியில் அவருடைய பங்கு மிகப் பெரியது.

இதனையில் பும்ரா பற்றி பேசியிருக்கும் லட்சுமிபதி பாலாஜி கூறும் பொழுது “வாசிம் அக்ரம் பாய் அல்டிமேட் ஆனவர். அவருக்குப் பிறகு ஆசிய கண்டத்தில் பும்ராதான் சிறந்தவர். பும்ரா பெருமைகளை துரத்திச் சென்று அடைவதற்கு இது சரியான நேரம் என்று நினைக்கிறேன். அவர் தனி ஒருவராக இந்தியாவுக்கு இந்த டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தர முடிந்தால் மிகச் சிறப்பானதாக இருக்கும். பும்ரா மற்றும் வாசிம் பாய் இருவரும் ஒரே மாதிரி குணாதிசயம் கொண்டவர்கள். அவர்கள் வேகப்பந்து வீச்சின் இயக்கவியலையே மாற்றி இருக்கிறார்கள்.அவர்களின் அப்பர்-பாடி ஸ்ட்ராங்கானது. மேலும் இவர்களின் ஃபாலோ த்ரு சிறப்பானது.

- Advertisement -

இதையும் படிங்க: லீக் சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி.. தோல்விக்கான முக்கிய மூன்று காரணங்கள்.. முழு விபரம்

பும்ரா இப்பொழுது ஒரு முழுமையான வேகப்பந்துவீச்சாளர். அவர் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கிறார். அவருக்குச் சிவப்பு பந்து வெள்ளைப் பந்து என்கின்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. புதிய பந்தில் சிறப்பாக இருக்கும் அவர், பந்து பழையதானால் அற்புதமாக ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார். மேலும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் மிடில் ஓவர்களில் வேரியேஷன்கள் மூலமாக அற்புதமாகப் வீசுவார்” என்று கூறி இருக்கிறார்.