50 ரன்.. பும்ரா ஸ்பெஷல் சாதனை.. பங்களாதேஷை வீழ்த்தியது இந்தியா.. அரை இறுதியில் நுழைந்ததா?

0
548
Bumrah

இன்று டி20 உலக கோப்பையில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஆன்டிகுவா நார்த் சவுண்ட் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை இந்திய அணி வீழ்த்தி ஏறக்குறைய அரைஇறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது.

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா 11 பந்தில் 23 ரன்கள், விராட் கோலி 28 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். சூரியகுமார் யாதவ் 2 பந்தில் 6 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரிஷப் பண்ட் அதிரடியாக 24 பந்தில் 36 ரன் எடுத்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சேர்ந்து 34 பந்தில் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். சிவம் துபே 24 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, இறுதிவரை ஆட்டம் இழக்காத ஹர்திக் பாண்டியா 27 பந்தில் 52 எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் ரியாத் ஹுசைன் இருவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய பங்களாதேஷ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 10 பந்தில் 13 ரன், தன்ஷித் ஹசன் 21 பந்தில் 31 ரன், தவ்ஹீத் ஹ்ரிடாய் 6 பந்தில் 4 ரன், சாகிப் அல் ஹசன் 7 பந்தில் 11 ரன், கேப்டன் நஜீபுல் சாந்தோ 32 பந்தில் 40 ரன், ஜாகிர் அலி 4 பந்தில் 1 ரன், ரிஷாத் ஹூசைன் 10 பந்தில் 24 ரன், மகமதுல்லா 15 பந்தில் 13 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தரப்பில் குல்தீப் யாதவ் 3, பும்ரா மற்றும் அர்ஸ்தீப் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள். இந்த வெற்றியின் மூலம் ஏறக்குறைய இந்திய அணி அரை இறுதிக்குள் நுழைந்துவிட்டது என்று கூறலாம். அதே சமயத்தில் ஏறக்குறைய பங்களாதேஷ் அணி அரையிறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்டது.

- Advertisement -

இதையும் படிங்க : ஹர்திக் பாண்டியா அதிரடி அரைசதம்.. இந்திய கிரிக்கெட்டில் 2 மெகா சாதனைகள்.. யாரும் இடம் பெறாத பட்டியல்

இந்த போட்டியில் பும்ரா நான்கு ஓவர்கள் பந்து வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஓவருக்கு நான்கு ரன்களுக்கும் கீழாக கொடுத்திருக்கிறார். டி20 உலகக் கோப்பை தொடர்களில் இதுவரையில் பும்ரா ஆறு முறை நான்கு ரன்களுக்கும் கீழாக ரன்கள் கொடுத்திருக்கிறார். இந்த வகையில் பும்ரா தனிச் சாதனை படைத்திருக்கிறார். அன்றிச் நோர்க்கியா, அஜந்தா மெண்டிஸ், டிம் சவுதி, வெயின் பர்னல் ஆகியோர் ஐந்து முறை நான்கு ரன்களுக்கும் கீழாக ரன்கள் கொடுத்திருக்கிறார்கள்.