பிசிசிஐ-காக பாகிஸ்தான் இனிமே இதை செய்யாதிங்க.. அக்தருக்கு எதிராக ஷாஹித் அப்ரிடி கருத்து

0
57
Shahid

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இனி பாகிஸ்தான் அணியை இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடர்களில் விளையாடுவதற்கு அனுப்பக்கூடாது என ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அரசு மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை அனுப்புவதற்கு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தத் தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த அழுத்தம் கொடுத்து வருகிறது.

- Advertisement -

சோயப் அக்தர் வித்தியாசமான கருத்து

இப்படியான நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணியை அனுப்பாவிட்டாலும் கூட, பாகிஸ்தான் அணி இந்தியா சென்று ஐசிசி தொடர்களில் விளையாடி, இந்தியாவில் இந்திய அணியை தோற்கடிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தற்போது இதற்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது “பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானதாகவும், தன்னிறைவு பெற்றதாகவும், வலிமையான கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். பாகிஸ்தான் வந்து இந்திய அணி விளையாட முடியாவிட்டால், பாகிஸ்தான் அணி இந்தியா சென்று விளையாடுவதற்கு எந்த சரியான காரணமும் கிடையாது. எனவே நாம் இந்தியா செல்லக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

பணமா அல்லது விளையாட்டா? ஐசிசி கூறட்டும்

மேலும் பேசிய ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது ” கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு கிரிக்கெட் உறுப்பினர் நாடுகளும் கிரிக்கெட் விளையாடுவதை உறுதி செய்ய விரும்புகின்றனவா? அல்லது இந்த நாடுகள் பணம் சம்பாதிப்பதை விரும்புகின்றனவா? என்பதை ஐசிசி இப்பொழுது தீர்மானிக்க வேண்டும்”

இதையும் படிங்க : வெறும் 198 ரன்.. பைனலில் கோட்டை விட்ட இந்திய U19 அணி.. கலக்கிய பங்களாதேஷ் சாம்பியன்

“ஷாகின் அப்ரிடி டி20 அணிக்கு கேப்டனாக கொண்டுவரப்பட்ட பொழுது நான் அதை எதிர்த்தேன். ஏனென்றால் அப்போது கேப்டனாக கொண்டுவரப்பட வேண்டியவர் முகமது ரிஸ்வான். அதே சமயத்தில் அவர் கேப்டனாக கொண்டு வந்து உடனே நீக்கியதற்கும் எதிர்ப்பு தெரிவித்தேன். ஏனென்றால் ஒருவரை அப்படி கொண்டு வந்து உடனே நீக்க கூடாது. இது அவரை மிகவும் பாதிக்கும்g என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -