தற்போது யுஏஇல் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ அணி இந்திய அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது.
ஆசிய கண்டத்தில் இருந்து எட்டு கிரிக்கெட் நாடுகளை வைத்து 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்றது. இதில் அரை இறுதியில் இந்திய அணி இலங்கை அணியையும், பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
சிறப்பாக துவங்கிய இந்திய அணி
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜவாத் அப்ரார் 35 பந்தில் 20, கலாம் சிட்டிக்கி 16 பந்தில் 1 ரன் எடுத்து சுமாரான துவக்கத்தை ஏற்படுத்தி வெளியேறினார்கள்.
இதற்கடுத்து பங்களாதேஷ் அணிக்கு பேட்டிங்கில் மிடில் வரிசையில் முகமத் சிகாப் ஜேம்ஸ் 67 பந்தில் 40 ரன்கள், ரிசான் ஹோசன் 65 பந்தில் 47 ரன்கள், பரித் ஹசன் 49 பந்தில் 39 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் பங்களாதேஷ் அணியின் 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய பந்துவீச்சில் குகா, சேத்தன் சர்மா மற்றும் ஹர்திக் ராஜ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
சாதாரணமாக சுருண்ட இந்திய அணி
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆயுஸ் மத்ரே 8 பந்தில் 1 ரன், வைபவ் சூரியவன்சி 7 பந்தில் 9 ரன் எடுத்து மோசமான துவக்கத்தை கொடுத்து வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து இந்திய அணிக்கு ஆண்ட்ரே சித்தார்த் 20, கேபி.கார்த்திகேயா 21, முகமத் அமான 26, ஹர்திக் ராஜ் 24 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக இந்திய அணி 35.2 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே எடுத்து, 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் பந்துவீச்சில் இக்பால் ஓசைன் யமான் மற்றும் ஹக்கிம் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள். பங்களாதேஷ் அணி 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு புதிய ஆசிய சாம்பியனாக மாறியது.
இதையும் படிங்க : நானும் சிராஜூம் ஸ்வீட்டானவர்கள்.. திடீர் பல்டி அடித்த ஹெட்.. களத்தில் என்ன நடந்தது?
கடந்த மாதங்களில் ஓமனில் நடைபெற்ற வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான ஆசியக் கோப்பை தொடரில் திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணி லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இது இரண்டாவது பெரிய தோல்வியாக அமைந்திருக்கிறது!






