ரிஷப் பண்ட் வந்ததில் மகிழ்ச்சி.. ஆனா அவர் பேட்டிங் செய்யற முறை எனக்கு திருப்தி இல்ல – சேவாக் பேட்டி

0
147
Sehwag

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணி 4 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியை மட்டுமே வென்றிருக்கிறது. நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்கள் அதிரடியாக எடுத்திருந்த போதிலும் கூட, அவருடைய பேட்டிங் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என ஷேவாக் கூறியிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு இறுதியில் பெரிய சாலை விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மறு வாழ்வில் இருந்து, கடுமையாக உழைத்தும் பயிற்சிகள் செய்தும் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடருக்கு திரும்பி இருக்கிறார். அவருக்கு ஏற்பட்ட காயங்களின் வீரியத்திற்கு, இவ்வளவு சீக்கிரம் அவர் வந்து செயல்படுவது எல்லோருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் பெரிய ரன்கள் எடுத்தாத ரிஷப் பண்ட், அடுத்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிராக அதிரடியாக சிறப்பாக விளையாடி இரண்டு அரை சதங்கள் எடுத்திருக்கிறார். இதில் சிஎஸ்கே அணிக்கு எதிராக டெல்லி அணி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு எதிராக தோல்வியடைந்து இருக்கிறது.

தற்பொழுது ரிஷப் பண்ட் 4 போட்டிகளில் விளையாடி 38 ஆவரேஜ் மற்றும் 158.33 ரேட், இரண்டு அரை சதங்களுடன் 152 ரன்கள் எடுத்திருக்கிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்களுக்கான பட்டியலில் நான்காவது இடத்தையும் பிடித்திருக்கிறார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் பேட்டிங் குறித்து பேசி உள்ள சேவாக் கூறும்போது “ரிஷப் பண்ட் இன்னிங்ஸ் நன்றாகத்தான் இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் ரன்கள் எடுக்காத அவர், அடுத்த இரண்டு போட்டிகளில் ரன்கள் எடுக்கும் பொழுது தனது விக்கெட்டை கொடுத்து விடுகிறார். அவர் இந்த நேரத்தில் கிரீசில் தங்கி இருந்து, தனது அரை சதத்தை ஆட்டம் இழக்காத 110 மற்றும் 120 ரன்கள் என சதமாக மாற்றி இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு தாராளமாக ரன்கள் வந்து கொண்டு இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : ஆர்சிபி ரசிகர்கள் எனக்கு செய்ததை மறக்கவே முடியாது.. விசுவாசமான ரசிகர்கள்னு கேள்விப்பட்டேன் ஆனா.. மயங்க் யாதவ் பேட்டி

அவரது பேட்டிங் நன்றாக இருந்தது. அவர் மீண்டும் பார்முக்கு திரும்பி கொண்டிருக்கிறார் என்பதை எல்லாமே மகிழ்ச்சிதான். ஆனால் இன்று டெல்லி வெல்லாது என்பது முதல் ஓவரிலேயே தெரிந்த விஷயமாக போய்விட்டது. எனவே ரிஷப் பண்ட் தனியாக பேட்டிங் பயிற்சி செய்வதற்கு பதிலாக, இந்த போட்டியை பேட்டிங் பயிற்சியாக எடுத்துக் கொண்டு களத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியிருக்க வேண்டும். இதற்குப் பிறகு அடுத்த போட்டிக்கான பயிற்சியை ஒட்டுமொத்தமாக தவிர்த்து விட்டு வந்து நேரடியாகவே விளையாடியிருக்கலாம்” என்று கூறி இருக்கிறார்.