நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கும், டெல்லியைச் சேர்ந்த 21 வயது வலதுகை வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மிகப்பெரிய கவனத்தை கிரிக்கெட் மட்டத்தில் கவர்ந்திருக்கிறார். மேற்கொண்டு நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் பெறுவாரா? என்கின்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது. மேலும் தீவிரமான ரசிகர் பட்டாளமான ஆர்சிபி அணிகின்ற ரசிகர்கள் மயங்க் யாதவுக்கு பெங்களூர் மைதானத்தில் ஆதரவு தந்தது ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கிறது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக மயங்க் யாதவ் அறிமுகம் செய்யப்பட்டார். அந்தப் போட்டியில் தனது அதிவேக பந்துவீச்சால் உலகத் தரமான பேட்ஸ்மேன்களை திணற வைத்து, மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி, பஞ்சாப் அணி வெல்ல வேண்டிய போட்டியை லக்னோ அணியை வெல்ல வைத்தார். ஆட்டநாயகன் விருதும் அவரே பெற்றார்.
இதற்கடுத்து லக்னோ அணியின் மூன்றாவது போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே தந்து மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ரஜத் பட்டிதார் என முக்கிய மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி, லக்னோ அணிக்கு வெற்றியை கொண்டு வந்தார். இந்த போட்டியிலும் அவரே ஆட்டநாயகன் விருதை வென்று, ஐபிஎல் வரலாற்றில் முதல் இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருது பெற்ற முதல் வீரர் என்கின்ற சாதனையையும் படைத்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக மணிக்கு 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இருந்த அவர், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 156.6 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி நடப்பு ஐபிஎல் தொடரின் அதிவேக பந்துவீச்சை பதிவு செய்தார். தொடர்ந்து அவரது வேகத்தால் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
இதே வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் இருந்தாலும் கூட, அவர்கள் எல்லோரும் அதிவேகத்தில் வீசுவதால் கட்டுப்பாட்டையும் துல்லியத்தையும் இழந்து விடுகிறார்கள். ஆனால் மயங்க் யாதவ் எவ்வளவு வேகமாக வீசும் போதிலும், சரியான இடத்தில் தொடர்ந்து பந்து வீசுகிறார். இதுதான் அவருடைய தனித்துவமாக அமைந்திருக்கிறது.
இதையும் படிங்க : விராட் கோலிக்கு வயச ஞாபகப்படுத்தனும்.. அவரை எங்களால மைதானத்துல சமாளிக்க முடியல – மேக்ஸ்வெல் பேச்சு
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நடந்தது பற்றி பேசிய மயங்க் யாதவ் “நான் உண்மையில் மிகவும் நன்றாக உணர்கிறேன். ஆர்சிபி அணிக்கு மிகவும் விசுவாசமான ரசிகர்கள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் நான் என்னுடைய பந்துவீச்சை முடித்துக் கொண்டு, பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த பொழுது, ஆர்சிபி ரசிகர்கள் எனக்கு பெரிய ஆதரவையும் உற்சாகத்தையும் கொடுத்தார்கள். அங்கு எனக்கு ஆர்சிபி ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மிகவும் மகிழ்ச்சி அளித்தது” என்று கூறியிருக்கிறார்.