ரொம்ப நன்றி ஏபிடி.. ஆர்சிபி ஒரு போட்டி கூட ஜெயிக்கல நீங்க அப்படி பண்ணதும்.. ஸ்காட் ஸ்டைரிஸ் கிண்டல்

0
148
ABD

17வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றதை அடுத்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸை கிண்டலாக விமர்சித்திருக்கிறார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவரில் 189 ரன்கள் குவித்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் சிறப்பாக விளையாடிய பட்லர் சதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

இனி பெங்களூர் அணி விளையாடும் போட்டிகளுக்கும், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸ்காட் ஸ்டைரிஸ் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோருக்கும் ஒரு நகைச்சுவையான தொடர்பு இருக்கிறது. இவர்கள் இருவரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியின் போது வர்ணனையாளராக இருந்தனர்.

அப்போது இவர்கள் இருவருக்குள்ளேயும் ஒரு பந்தயம் நடந்தது. போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியை அணிய வேண்டும் என்றும், மாறாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றால் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் இனி வரவிருக்கும் அனைத்து போட்டிகளிலும் பெங்களூர் அணியின் ஜெர்சியை அணிய வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அப்போட்டியில் எதிர்பார்த்ததைப் போலவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்று ஏபிடி வில்லியர்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றார். ஆனால் போட்டிக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இதனைக் குறிக்கும் விதமாக ஸ்காட் ஸ்டைரிஸ் தனது சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

அதில் அவர் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆர்சிபி ஜெர்சியை அணிய வைத்ததற்காக ஏபி டிவில்லியர்ஸ் அவர்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அவர் அப்படி செய்ததிலிருந்து 0-3. அதாவது மூன்று போட்டிகளிலும் பெங்களூர் அணி தோல்வியை தழுவி இருக்கிறது” என்று கிண்டலாக கருத்தினை பதிவிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க : பாப் டு பிளேசிஸ் உங்களுக்கு வெட்கமா இல்லையா.. ஏன் இப்படி பேசுறிங்க – முகமது கைஃப் விமர்சனம்

அவரது இந்த பதிவு தற்போது ரசிகர்களிடையே அதிக அளவு வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தற்போது ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.