பாப் டு பிளேசிஸ் உங்களுக்கு வெட்கமா இல்லையா.. ஏன் இப்படி பேசுறிங்க – முகமது கைஃப் விமர்சனம்

0
229
Faf

நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் அந்த அணி தான் விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கு போட்டிகளை தோற்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ் குறித்து முகமது கைப் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியில் சிறப்பான முறையில் விளையாடும் வந்த மகிபால் லோம்ரர் பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. மேலும் பந்துவீச்சில் ஒரு போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வைசாக் விஜயகுமாருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இதேபோல் பந்துவீச்சில் விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கும் மேக்ஸ் பெல்லுக்கும் நேற்று பந்து வீச வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இப்படி போட்டிக்கு முன்பாகவும் களத்திலும் ஆர்சிபி அணி நிர்வாகம் நிறைய தவறுகளை செய்திருந்தது. அந்த அணி எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. அணி இப்படியான சூழ்நிலையில் இருக்கும் பொழுது ஒரு பக்கத்தில் விராட் கோலி மட்டுமே விளையாடி அந்த அணியை காப்பாற்றி வருகிறார். ஆனால் தற்பொழுது அவரது ஸ்ட்ரைக் ரேட் குறித்தும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று தோல்விக்கு பின் பேசிய ஆர்சிபி கேப்டன் பாப் டு பிளிசிஸ் “ஆடுகளம் பார்ப்பதற்கு தட்டையாக தெரிந்தது. ஆனால் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இல்லை பந்து நின்று வந்தது. நாங்கள் 190 ரன்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்தது போல் நடக்கவில்லை. போட்டியில் இரண்டு வலதுகை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ததால் மேக்ஸ்வெல்லுக்கு ஓவர் தரவில்லை” என்று தோல்விக்கு பல காரணங்கள் கூறியிருந்தார்.

இது குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கும் முகமது கைப் கூறும் பொழுது “பாப் சாக்கு போக்குகளை மட்டுமே கூறுகிறார். முதலில் இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். ஆடுகளத்தை குறை கூறுவதால் எதுவும் மாறப்போவதில்லை. இதை நான் வெட்கம் இல்லாமல் பேசுவது என்று கூறுவேன். மேக்ஸ்வெல் ஏன் பந்து வீசவில்லை என்பதற்கான சரியான பதில்கள் அவரிடம் இல்லை. உங்களுக்காக அவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பொழுது இதே பதிலை சொல்ல முடியுமா?

- Advertisement -

இதையும் படிங்க : 2008 ஐபிஎல் ஏலத்துல.. சிஎஸ்கே வாங்கும்னு முட்டாள்தனமா நினைச்சுட்டு இருந்தேன் – தினேஷ் கார்த்திக் பேட்டி

கடைசிக்கட்ட ஓவர்களில் அணிக்கு ரன் தேவைப்பட்டபோது தினேஷ் கார்த்திக் விளையாடாமல் வெளியில அமர்ந்திருந்தார். அவர் தோல்விக்கு சொன்ன காரணங்கள் ஒவ்வொன்றும் சாக்கு போக்காக இருந்தது. எல்லாவற்றையும் விராட் கோலி தலையில் வைக்காமல், பயிற்சியாளர் உடன் சேர்ந்து இதற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.